செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
718b3dc2-f373-4f08-9488-2b5c39562d03
-

புகழ்பெற்ற 20 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல்முறையாக 'என்யுஎஸ்'

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) முதல்முறையாக உலகின் புகழ்பெற்ற 20 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நேற்று வெளியான 'டைம்ஸ் உலகப் புகழ்பெற்ற உயர்கல்வி நிலையங்கள்' பட்டியலில் 'என்யுஎஸ்' 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அது 24வது இடத்தில் இருந்தது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சிங்கப்பூரர்களுக்கான அரசாங்கச் சேவைகளில் 99% மின்னிலக்கமயம்

அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் இடை­யிலான 99 விழுக்­காட்­டுப் பரி­வர்த்­தனை­க­ளைத் தற்­போது மின்­னி­லக்க முறை­யில் செய்ய இய­லும். சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்­காட்சி நிலை­யத்­தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற 'ஸ்டேக் 2022' இணை­யத் தொழில் நுட்ப மாநாட்­டில் உரை­யாற்­றிய அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இத­னைத் தெரி­வித்­தார். முன்னதாக, அடுத்த ஆண்­டுக்­குள் 95 விழுக்­காட்­டுப் பரி­வர்த்­த­னை­களை மின்­னி­லக்­கப்­ப­டுத்த அர­சாங்­கம் இலக்கு கொண்­டி­ருந்­தது.

பாட்டாளிக் கட்சி செயற்குழுவில் மூன்று புதிய நியமனங்கள்

பாட்டாளி கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மூவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு பொருளாளராக நியமிக்கப்பட்டதையடுத்து நெதனியல் கோ துணைப் பொருளாளராகவும் ஆங் பூன் யாவ், டான் கோங் சூன் இருவரும் துணை ஏற்பாட்டுச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் குழப்பத்தால் விமானத்தை தரையிறக்க மறுத்த ஸ்கூட் விமானி

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த ஸ்கூட் விமா­னம் டிஆர்285ல் பய­ணி­கள் சிலர் செய்த குழப்­பத்­தால் விமா­னம் தரை­யி­றங்­கு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது. கடந்த திங்­கட்­கி­ழமை சாங்கி விமா­னத்­தில் தரை­யி­றங்­கு­வதற்கு முன்­னர் பய­ணி­கள் சிலர் விமான இருக்கை-வாரைப் பொருத்­திக்­கொள்ள மறுத்­த­னர். இதைய­டுத்து தரை­யி­றங்­கும் முயற்­சி­யைக் கைவிட்­ட­து­டன் விமானி அது­குறித்துப் பயணி­க­ளுக்கு விளக்­கம் அளித்­தார்.