மதிநுட்பக் குறைபாடு தொடர்பில் புதிய நடுவம்

மதிநுட்பக் குறைபாடு தொடர்பில் புதிய நடுவம்

1 mins read
cfd520c5-3ca3-4cff-af29-39ee2c2711ba
-

மதி­நுட்­பக் குறை­பாடு உள்­ளோ­ருக்­கும் அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­களுக்­கும் சேவை வழங்­கும் புதிய நிலை­யம் குவீன்ஸ் ரோட்­டில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

'மைண்ட்ஸ் ஹப்' எனும் இந்த நிலை­யத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­களும் நோய்­க­ளைக் கண்­ட­றி­யும் சேவை, மதிப்­பீட்­டுச் சேவை, வேலை­வாய்­ப்பு ஆத­ரவு உள்­ளிட்ட சேவை­களும் வழங்­கப்­படும்.

மதி­நுட்­பக் குறை­பாடு உள்­ளோ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­கள் தங்­க­ளைப்­போ­லவே இச்­சே­வை­யில் ஈடு­பட்­டுள்ள மற்­ற­வர்­க­ளு­டன் கலந்து பழக இது வாய்ப்பு ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது.

அவர்­கள் நட்பு வட்­டத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் நிதித் திட்­ட­மி­ட­லுக்­குத் தேவை­யான ஆத­ரவை வழங்­க­வும் இது வகை­செய்­யும்.

பாதிக்­கப்­பட்­ட­வர் சார்­பில் அவ­ரது பரா­ம­ரிப்­பா­ளர் சட்­ட­ரீ­தி­யான முக்­கிய முடி­வு­களை எடுப்­ப­தற்கு இதன் மூலம் விண்­ணப்­பிக்­க­லாம்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த அமைப்பு, அடுத்த ஈராண்­டு­களில் இத்­த­கைய மேலும் இரண்டு நடு­வங்­க­ளைத் திறக்­க­வி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

நடு­வத்­தின் திறப்­பு­வி­ழா­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்­து­கொண்­டார்.

இத்­த­கைய நடு­வம், மதி­நுட்­பக் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர் தங்­கள் வீடு­க­ளுக்கு அரு­கி­லேயே தேவைப்­படும் சேவை­களைப் பெறு­வ­தில் முக்­கி­யப் பங்­காற்­று­வ­தாக அமைச்­சர் மச­கோஸ் தமது சிறப்­பு­ரை­யில் குறிப்­பிட்­டார். அவர்­கள் மற்­ற­வர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கா­மல் வாழ­வும் சமு­தா­யத்­தில் துடிப்­பு­டன் பங்­கெ­டுக்­க­வும் இத்­த­கைய நடு­வம் வகை­செய்­வதாக அமைச்சர் கூறி­னார்.

சேவை­களை ஒருங்­கி­ணைப்­பது குறித்­தும் உடற்­கு­றை­யுள்ள மூத்­தோ­ரின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வது குறித்­தும் பரா­ம­ரிப்­புச் சேவை வழங்­கு­வோ­ரும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு உத­வும் தொழில்­முறை நிபு­ணர்­களும் கருத்­து­ரைத்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.