கொவிட்-19 கிருமியுடன் வாழ சிங்கப்பூர் வெற்றிகரமாகப் பழகிக்கொண்டது: வல்லுநர்கள்

கொவிட்-19 கிருமியுடன் வாழ சிங்கப்பூர் வெற்றிகரமாகப் பழகிக்கொண்டது: வல்லுநர்கள்

1 mins read
09f95567-c6b4-49d5-8815-ba53dbfb8f80
-

சிங்­கப்­பூ­ரில் மீண்­டும் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­ட­மாட்டா. ஏனெ­னில் இந்­தக் கிரு­மி­யு­டன் வாழ்­வ­தற்கு சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மா­கப் பழ­கிக்­கொண்­டுள்ளது என்று வல்­லு­நர்­கள் கருத்­து­ரைத்து உள்­ள­னர்.

கொவிட்-19 கிரு­மி­யின் புதிய திரி­பு­கள் தொடர்ந்து கண்­ட­றி­யப்­ப­டு­வ­து­டன் இந்­தக் கிரு­மியை முற்­றி­லும் அழிக்க இய­லாது என்று கரு­தப்­படும் வேளை­யில் வல்­லு­நர்­கள் இவ்­வாறு கூறி­யுள்­ள­னர்.

பொது இடங்­களில் கட்­டா­ய­மாக முகக்­க­வ­சம் அணி­தல், பாதிக்­கப்­பட்­டோ­ரின் தொடர்­புத் தடங்­க­ளைக் கண்­ட­றி­தல், சில இடங்­க­ளுக்கு தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் அடிப்­ப­டை­யி­லான அனு­மதி போன்ற கட்­டுப்­பா­டு­கள் கடந்த ஆண்­டில் விலக்­கப்­பட்­டன.

இம்­மா­தம் 7, 8ஆம் தேதி­களில், அன்­றாட கொவிட்-19 பாதிப்பு எண்­ணிக்­கையை வெளி­யி­டும் நடை­முறை நிறுத்­தப்­பட்­ட­து­டன் மருத்­து­வ­ம­னை­கள் முழு சிகிச்சைப் பிரிவையும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக இனி ஒதுக்­கத் தேவை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டது.

நாடு வழக்கநிலைக்­குத் திரும்­பு­வதை இந்த நட­வ­டிக்­கை­கள் காட்­டுகின்றன. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு அப்­பால் நீரி­ழிவு நோயும் உல­க­ளா­விய நிலை­யில் அதி­க­ரிக்­கும் காச­நோ­யும் அதிக கவ­னம் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யவை என்­பதை வல்­லு­நர்­கள் சுட்­டி­னர்.

மீண்­டும் கொரோனா கிரு­மிப்­ ப­ர­வல் ஏற்­பட்­டா­லும் பாதிப்பு தீவி­ர­மாக இருக்­காது என்று அவர்­கள் கூறி­னர். சளிக்­காய்ச்­ச­லைப்­போலவே கொவிட்-19 கிரு­மி­யை­யும் சிங்­கப்­பூ­ரில் இருந்து முற்­றி­லும் அழிக்­க­மு­டி­யாது என்­பதை வல்லுநர்­கள் நினை­வு­ப­டுத்­தி­னர்.