இம்மாதம் 23ஆம் தேதி 'பிஎஸ்எல்இ' முடிவுகள்

இம்மாதம் 23ஆம் தேதி 'பிஎஸ்எல்இ' முடிவுகள்

1 mins read
2957a4b2-a1db-4623-a421-bfcb98611da9
-

தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடி­வு­கள் இம்­மா­தம் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் வெளி­யி­டப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

உடல்­ந­ல­மில்­லாத மாண­வர்­கள் பள்­ளிக்­குச் சென்று தேர்வு முடி­வு­களை வாங்­கு­வ­தைத் தவிர்க்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் தேர்­வு­கள், மதிப்­பீட்டு வாரி­யத்­தின் இணை­ய­வா­ச­லில் இம்­மா­தம் 23ஆம் தேதி காலை 11.45 மணி­யில் இருந்து அடுத்த மாதம் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மாண­வர்­கள் தங்­கள் தேர்வு முடி­வு­க­ளைக் காண இய­லும். தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு முடி­வு­க­ளு­டன், தகு­தி­பெற்ற மாண­வர்­க­ளுக்கு உயர்­நி­லைப்­பள்­ளிச் சேர்க்­கைக்­கான தெரி­வுப் பட்­டி­யல் வழங்­கப்­படும்.

இம்­மா­தம் 23ஆம் தேதி காலை 11.30 மணி­யில் இருந்து 29ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி வரை அவர்­கள் தாங்­கள் விரும்­பும் பள்­ளி­களுக்­கான பட்­டி­யலை இணை­யம்­வழி சமர்ப்­பிக்­க­லாம்.

அடுத்த மாதம் 21ஆம் தேதிக்­கும் 23ஆம் தேதிக்­கும் இடையே மாண­வர்­கள் எந்த உயர்­நி­லைப் பள்­ளிக்­குச் செல்­ல­வேண்­டும் என்று தெரி­விக்­கப்­படும்.