விபத்து: $1.7 மி. இழப்பீட்டுக் கோரிக்கை

விபத்து: $1.7 மி. இழப்பீட்டுக் கோரிக்கை

1 mins read
47bfe06e-a717-4895-993e-22190ec22dca
-

தஞ்சோங் பகாரில் சென்ற ஆண்டு நடந்த மோசமான கார் விபத்தில் உயிரிழந்த மூன்று ஆடவர்களின் குடும்பத்தினர், காரை ஓட்டியவர் தரப்பிலிருந்து ஏறக்குறைய 1.7 மில்லியன் வெள்ளி இழப்பீடு கோருகின்றனர்.

இதன் தொடர்பில் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

சென்ற ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் தஞ்சோங் பகார் ரோட்டில் நடந்த விபத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கடைவீட்டில் மோதி தீப்பிடித்தது.

சம்பவத்தில் காரில் இருந்த ஐந்து ஆடவர்கள் மாண்டனர்.

காரை ஓட்டிய 29 வயது ஜோனதன் லாங் ஜுன்வெயின் காதலி, காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க முயற்சி செய்து தோல்வியுற்றார். மாண்ட ஜோனதனின் தாயாரிடம் இழப்பீடு கோரப்படுகிறது.