பிரதமர் லீ சியன் லூங், இன்று முதல் நாளை மறுநாள் வரை தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் 29வது ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் (ஏபெக்) கலந்துகொள்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினியில் நடைபெற்ற ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு ஏப்பெக் தலைவர்கள் இதில் நேரடியாகக் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
இவ்வாண்டு மாநாட்டிற்குத் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா தலைமை வகிப்பார். மாநாட்டில் உலகப் பொருளியலை விரைந்து மீட்பதற்குரிய வழிகள் குறித்துத் தலைவர்கள் கலந்தாலோசிப்பர் என்று சிங்கப்பூர்ப் பிரதமர் அலுவக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

