24 மணி நேர உதவிக்குழு

24 மணி நேர உதவிக்குழு

2 mins read
9e66605d-5f98-4cc4-a687-3b7277e78a79
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கிடம் இருந்து சிண்டா சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டார் திரு ரவீந்திரன் சதானந்தன். படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு -

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவளிப்பர்

மாதங்கி இளங்­கோ­வன்

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­படு­வோர் இனி 24 மணி நேர­மும் சமூக சேவை நிபு­ணர்­க­ளி­டம் உதவிநாடலாம். அடுத்த ஆண்டு ஏப்­ரல் முதல் செயல்­பாட்­டிற்கு வரும் தேசிய வன்­மு­றைத் தடுப்பு அழைப்பு எண் மூல­மாக அது சாத்­தி­ய­மா­கும்.

இதன்­பொ­ருட்டு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சைச் சேர்ந்த சமூக சேவை நிபு­ணர்­கள், காவல்­து­றை­யு­டன் இணைந்து செயல்­ப­டு­வர். பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களைப் பாது­காக்­கும் நோக்­கில் நிகழ்­வி­டத்­தி­லேயே அவ­ச­ர­கா­லப் பாது­காப்பு ஆணை­க­ளைப் பிறப்­பிக்­கும் அதி­கா­ர­மும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

துன்­பு­றுத்­த­லில் இருந்து குழந்­தை­க­ளை­யும் முதி­யோ­ரை­யும் பாது­காப்­பது தொடர்­பில் ஏற்­கெ­னவே ஒரு குழு பணி­யாற்றி வரு­கிறது. துன்­பு­றுத்­தலை எதிர்­கொள்­ளும் வாழ்க்­கைத்­து­ணை­க­ளை­யும் பாது­காக்­கும் வகை­யில் அது விரி­வு­படுத்­தப்­படும்.

குடும்ப வன்­மு­றையை எதிர்­கொள்ள 2023ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கை­களில் இவை அடங்­கும் என்று நேற்று நடந்த ஒரு கருத்­த­ரங்­கில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் தெரி­வித்­தார்.

பூன் லேயில் உள்ள 'தி செவ்­ரான்ஸ்' கேளிக்கை மன்­றத்­தில் நடந்த அக்­க­ருத்­த­ரங்­கில் குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­களை எதிர்­கொள்ள எடுத்­து­வ­ரும் முயற்­சி­களுக்­காக 11 சமூக சேவை நிபு­ணர்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் 'குடும்ப வன்­முறை கலந்­து­ரை­யாடல் குழு' அங்­கீ­கார விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

குழு பிரி­வில் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­திற்­கும் (சிண்டா) விருது கிடைத்­தது.

சிண்­டா­வைப் பிர­தி­நி­தித்து விரு­தைப் பெற்­று­கொண்ட திரு ரவீந்­தி­ரன் சதா­னந்­தன், 52, கடந்த ஏழரை ஆண்­டு­க­ளாக மூத்த துணை ஆலோ­ச­க­ராக பணி­பு­ரிந்து வரு­கி­றார். தம் பல்­லாண்­டு­கால அனு­ப­வத்­தில் பல்­வேறு குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கண்­டுள்ள இவர், அவற்­றால் பெரும்­பா­லும் பாதிப்­ப­டை­வது பெண்­களும் பிள்­ளை­க­ளும்­தான் என்­றார்.

"சிலர் தங்­க­ளது குடும்ப வன்­மு­றைக் கதை­களை கிராப் வாகன ஓட்­டு­நர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும்­போது அவ்­வோட்­டு­நர்­கள் குடும்ப சேவை நிலை­யங்­கள் அல்­லது சிண்டா போன்ற அமைப்­பு­களை நாட ஊக்­கு­விப்­ப­தா­கக் கேள்­விப்­பட்­ட­போது நான் வியப்­படைந்­தேன். குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு வெவ்­வேறு வழி­களில் உத­வு­வ­தில் பொது­மக்­க­ளுக்­கும் முக்­கி­யப் பங்­கு உண்டு," என்­றார் திரு ரவீந்­தி­ரன்.

சிண்டா உள்­ளிட்ட விருது வென்ற மூன்று அமைப்­பு­களும் கடந்த ஆண்டு குடும்ப வன்­முறை­யில் சிக்­கிய 230 குடும்­பங்­க­ளுக்கு உத­வின.