தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவி பகிர்வு: நால்வருக்கு 13½ - 22 ஆண்டுகள் சிறை

1 mins read
1c65624b-4740-4ade-a424-388ccb25ae0b
-

தங்­கள் மனை­வி­யரை மயக்­க­முறச் செய்து, ஒரு­வர் மனை­வி­யு­டன் இன்­னொ­ரு­வர் பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்ட வழக்­கில் தொடர்­பு­டைய எழு­வ­ரில் நால்­வருக்கு 13½ ஆண்டு முதல் 22 ஆண்­டு­வரை சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர்­களில் 50 வய­தைத் தாண்­டிய ஒரு­வ­ரைத் தவிர மற்ற மூவ­ருக்­கும் 20 பிரம்­படி­களும் கிடைக்­கும்.

"நீதி­மன்­றத்­திற்கு வந்த மிக­வும் வியப்­பான, கொடூ­ர­மான பாலி­யல் வழக்குகளில் இதுவும் ஒன்று," என்று நீதிபதி பாங் காங் சாவ் குறிப்பிட்டார்.

தங்­கள் மனை­வி­ய­ரின் படங்­களை­யும் காணொ­ளி­க­ளை­யும் அவர்­கள் தங்­க­ளுக்­குள் பகிர்ந்­து­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட மனை­வி­ய­ருள் ஒரு­வர் தான் அம்­மா­திரி நிலை­யில் இருக்­கும் படங்­க­ளைத் தன் கைப்­பே­சி­யில் கண்­டதையடுத்து. இந்­தக் குற்­றச்­செ­யல்­கள் வெளிச்­சத்­திற்கு வந்­தன.