மதிநுட்பக் குறைபாடு உள்ள மகளைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தை

மதிநுட்பக் குறைபாடு உள்ள மகளைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தை

1 mins read
87789b02-b31a-4822-830e-13639445841b
-
Google News Preferred Icon

மதிநுட்பக் குறைபாடு உள்ள தனது 34 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த 58 வயது ஆடவருக்கு 23 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் பல ஆண்டுகளாக பாலியல் உறவு இல்லாததால் ஆடவர் காதலியுடன் தொடர்பு வைத்திருந்தார். காதலியைப் பிரிந்த பிறகு அவர் மகளிடம் இவ்வாறு தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு ஆடவரின் விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.

2020ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி இரவு, அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடிப்படி அருகே மகளிடம் தனது கணவன் தகாத முறையில் நடந்துகொள்வதைத் தாயார் பார்த்தார். தனது மற்றொரு

மகளுடன் கலந்தாலோசித்த பிறகு ஜூலை 10ஆம் தேதி காவல்துறையிடம் அவர் புகார் அளித்தார்.

ஆடவர் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.