பணிப்பெண்ணைத் துன்புறுத்திய மாதுக்கு 9 மாதச் சிறை

சிங்­கப்­பூ­ர­ரான 58 வயது ஆர்னி மோவானி, தனது இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­யது தொடர்­பி­லான மூன்று குற்­றச்­சாட்டு­களை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து நேற்று அவ­ருக்கு ஒன்­பது மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பணிப்­பெண்­ணான 46 வயது திரு­வாட்டி ரெனி, 2020ஆம் ஆண்டு நவம்­பர் 18ஆம் தேதி, உட்­லண்ட்­சில் இருந்த ஆர்­னி­யின் வீட்­டி­ல் இ­ருந்து தப்­பித்­துக் காவல் நிலை­யம் சென்­றார். அதன்­பி­றகு இந்­தோ­னீ­சி­யத் தூத­ர­கத்­தில் அவர் தங்­க­வைக்­கப்­பட்­டார்.

ஆர்னி தாக்­கி­ய­தில் ரெனி­யின் முகத்­தி­லும் முது­கி­லும் காயங்­கள் காணப்­பட்­டன. ரெனிக்கு சம்­ப­ள­மும் முறை­யா­கத் தரப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வந்­தது.

ஆர்னி தன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து பணிப்­பெண் ரெனிக்கு 4,615 வெள்ளி இழப்­பீடு தரும்­படி அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆர்னி வீட்­டில் மேலும் ஒரு பணிப்­பெண்­ணும் வேலை­செய்­த­தா­க­வும், அவர் தனிப்­பட்ட முறை­யில் செய்­து­வந்த 'கறி­பஃப்' வியா­பா­ரத்­துக்கு உத­வும்­படி ரெனி­யும் அந்த பணிப்­பெண்­ணும் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடையில் ஆர்னி பலமுறை ரெனியைக் கிள்ளியதில் ரெனியின் கையில் நிரந்தரத் தழும்புகள் ஏற்பட்டன. ஆர்னிக்கும் மற்றொரு பணிப்பெண்ணான அனிசுக்கும் இடையே எந்தவிதத் தகராறும் இல்லை எனக் கூறப்பட்டது. நேற்று 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்ட ஆர்னி, அடுத்த மாதம் 5ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!