சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு குவாண்டாஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு சிலரிடம் தட்டம்மை தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு விக்டோரியா மாநில அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவசர சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து மெல்பர்னுக்குப் பயணம் செய்த மூவர் அடங்கிய குடும்பத்தில் இருவர் தட்டம்மை தொற்றைப் பரப்பக்கூடிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. மெல்பர்னில் அவர்கள் தரையிறங்கியவுடன் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
அந்தக் குடும்பம் மெல்பர்னில் வசிப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் குடும்ப உறுப்பினர்களின் வயது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
தட்டம்மை தொற்று கண்டறியப்பட்டவர்கள் சென்ற இடத்தில் இருந்தவர்கள் தங்களது சுகாதாரத்தைக் கண்காணிக்குமாறு விக்டோரியா மாநில சுகாதாரத் துறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


