சிறுவயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார்

தமது சொந்த மகளை நான்கு, ஐந்து வயதாக இருந்தபோது இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றத்தை 37 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 18) உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மருத்துவமனையில் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிந்த மலேசியரான இவர், 2013ஆம் ஆண்டுவாக்கில் தமது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

தற்போது 13 வயதாகும் சிறுமி, தொடக்கநிலை ஐந்தில் பாலியல் கல்வி பயின்றபோதுதான், தமது தந்தை செய்தது தவறு என்பதை உணர்ந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மற்ற துன்புறுத்திய சம்பவங்கள் குறித்த விவரங்களை நினைவில் கொள்ள முடியவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமது நண்பர்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்றும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டால், தமது தாயார் தனியாக குடும்பத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் பயந்ததால், தமக்கு நடந்த வன்கொடுமையை யாரிடமும் அச்சிறுமி சொல்லவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமி தமக்கு நடந்த வன்கொடுமைக்கு தன்னைத் தானே பழிகூறி, தன்னைக் காயப்படுத்தத் தொடங்கினாள். இவ்வாண்டு ஜனவரியில் சிறுமியின் கைகளில் காயங்களைக் கவனித்த ஆசிரியரிடம் சிறுமி நடந்ததை கூறினார்.

பின்னர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சிறார் பாதுகாப்பு அதிகாரியும் பள்ளி ஆலோசகரும் சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையிடம் மருத்துவமனை புகார் செய்தது.

இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கும் செப்டம்பர் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறுமி 17 முறை மனநல ஆலோசனை பெறச் சென்றாள். மனச்சிதைவை ஏற்படுத்தும் அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டிருப்பதால் குற்றவாளிக்கு எட்டரை ஆண்டு முதல் ஒன்பதாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

இருப்பினும் குற்றத்தை சீக்கிரமே ஒப்புக்கொண்டதால் இதைவிடக் குறைவான தண்டனை விதிக்குமாறு தற்காப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

தண்டனை முடிந்ததும் அந்த ஆடவர் சொந்த நாட்டுக்கு கடத்தப்படுவார் என்றும் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்யும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமை முயற்சியின் ஒவ்வொரு குற்றத்திற்கும் குறைந்தபட்ச தண்டனை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்களுக்கு இடையே வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!