குழந்தைகளுடன் வாடகை வீட்டுக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தினர் 'காம்லிங்க்' சமூக உதவித் திட்டத்துக்கு தாமாகவே தகுதி பெறுவர்.
இதற்கு தகுதி பெறும் குறைந்த வருமானக் குடும்பத்தினர் புதிய வாடகை வீட்டுக்கு குடியேறும்போது உரிய உதவிகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
பொதுமக்களை கலந்துரை யாடலில் ஈடுபடுத்தும் முன்னேறு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு புதிய திட்டத்தை பற்றி அவர் அறிவித்தார்.
ஐடிஇ காலேஜ் வெஸ்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

