விமானத்தில் தட்டம்மை தொற்றுச் சம்பவம்

விமானத்தில் தட்டம்மை தொற்றுச் சம்பவம்

1 mins read
937f8643-e278-400b-a27c-97b21be6cea6
-

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஆஸ்­திரே லியா­வின் மெல்­பர்ன் நக­ருக்­குச் சென்ற குவாண்­டாஸ் விமா­னத்­தில் மூவ­ருக்கு தட்­டம்மை பாதிப்பு இருந்­த­தாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநில அர­சாங்­கம் நேற்று தெரி­வித்­தது.

ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூவர் பாதிக்­கப்­பட்­ட­னர். நவம்­பர் 14ஆம் தேதி அவர்­கள் குவாண்­டாஸ் 'QF36' விமா­னத்­தில் பய­ணம் செய்­த­னர்.

இரு­வ­ருக்கு தட்­டம்மை தொற்று பர­வக்­கூ­டிய நிலை­யில் இருந்­த­தால் அவர்­க­ளுக்கு உட­னடி யாக உதவி வழங்­கப்­பட்­டது.

இவர்­கள் பய­ணம் செய்த விமா­ன­மும் மெல்­பர்ன் விமான நிலை­ய­மும் தட்­டம்மை சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்ட இடங்­க­ளாக விக்­டோ­ரியா அரசு அறி­வித்து உள்­ளது.

அதன்­படி நவம்­பர் 15ஆம் தேதி காலை 6.10 மணி­யி­லி­ருந்து காலை 8.40 மணி வரை­யில் இந்த இரு இடங்­களில் இருந்­த­வர்­ களுக்கு ஏதா­வது அறி­குறி இருந்­தால் உட­ன­டி­யாக மருத்­துவ உதவி நாட வேண்­டும் என்­றும் முகக்­க­வ­சம் அணிந்து தனி­மைப் படுத்­திக்­கொள்ள வேண்­டும் என்றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்­தக் குடும்­பம் மெல்­பர்­னில் வசிப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அந்­தக் குடும்ப உறுப்­பி­னர்­ களின் வயது குறித்த விவ­ரம் எது­வும் வெளி­யி­டப்­பட வில்லை.