தன்னலம் பாராமல் சமூகத்துக்குப் பங்காற்றிய சமூக சேவை ஊழியர்கள் நேற்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இஸ்தானாவில் நடைபெற்ற சிறந்த சமூக சேவையாளர் விருது நிகழ்ச்சியில் ஆக்க கரமான முறையில் செயல்பட்ட மேலும் இருவருக்கு நம்பகமான சமூக சேவையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களில் டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த முதன்மை மருத்துவ சமூக சேவையாளராக பணியாற்றும் 44 வயது கேரன் குவாவும் ஒருவர்.
தனது தந்தை சிறைத் துறையில் பணியாற்றியபோது கைதிகளுக்கு உதவியதைப் பார்த்து தனக்கும் உதவி செய்யும் மனப்பான்மை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதையே தனது வாழ்க்கைத் தொழிலாகவும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
இருபது ஆண்டுகளாக சமூக சேவையாளராக பணியாற்றி வரும் இவர், சில வேளைகளில் மிகுந்த களைப்பாக இருந்தாலும் தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து மற்றவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக உறுதி கூறியுள்ளார்.
அனைவரும் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சூல்கிஃப்லியும் பங்கேற்றார்.

