பொன்மணி உதயகுமார்
வசதி குறைந்தவர்கள் முதலீடு செய்வதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கக் கூடாது என்பதெல்லாம் தவறான எண்ணம் என்று 'ஹியூ கோசேவ்' (Hugosave) நிறுவனத்தின் நிதி, பணப் பட்டுவாடா மேலாளர் லோரீன் டீனா, 33 கூறுகிறார்.
சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் லோரீன், பணத்தை சேமிப்பதுடன் அதை மேலும் பெருக்க என்ன செய்யலாம் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார்.
சேமிப்பைப் பெருக்க அவர் பரிந்துரைக்கும் வழிகளில் ஒன்று தங்கத்தை $0.01 விலையிலிருந்து வாங்க உதவும் 'ஹியூகோசேவ் கோல்ட் வால்ட்' திட்டத்தை பயன் படுத்துவதாகும். தங்கம் வாங்குவது விலை அதிகம் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் அமைந்திருக்கும் இத்திட்டத்தை, எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் மக்கள் பயன்படுத்தலாம் என்கிறார் லோரீன்.
சேமிப்புத் திட்டங்கள் எனப் பார்க்கும்போது தங்கம் வாங்குவதை மக்கள் அதிகம் விரும்பு கிறார்கள். இதுவும் ஒரு முதலீட்டு முறைதான் என்கிறார் லோரீன்.
ஆனால் கடைகளில் தங்க நகை வாங்குவதைவிட, மற்ற வழிகளில் தங்கத்தை வாங்குவது முதலீட்டைப் பொறுத்தவரை சிறந்ததாக இருக்கலாம்.
கடைகளில் தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் ஆகியவற்றுக்கும் சேர்த்து வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு வாங்கும் தங்கத்தை மீண்டும் விற்பனை செய்யும்போது, சந்தை மதிப்பை முழுவதுமாக பெறுவது கடினம். அதுபோக, நகை வடிவில் வாங்கும் தங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வாடிக்கையாளர்களைச் சேரும்.
தங்க நகைகளை ஆபரணமாக அணிய விரும்பாதவர்கள், அதாவது தங்கம் வாங்குவதை ஒரு சேமிப்புத் திட்டமாக மட்டுமே பார்ப்பவர்களுக்குக் காகித உரிமம் அல்லது செயலி மூலம் தங்கம் வாங்குவது பயன்படலாம்.
"இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆகையால், சிலர் தங்கம் வாங்கு வதில் அதிக பயனோ லாபமோ இல்லை என்று கருதுவது தவறான ஒன்று," என்று கூறுகிறார் லோரீன்.
முதலீடு பற்றி சிந்திப்பவர்கள், நேரம் பார்த்து முதலீடு செய்ய வேண்டும் என்ற பரவலான பரிந்துரை அனைத்து முதலீடுகளுக்கும் பொருந்தாது என்றும் இவர் கூறுகிறார். சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கணித்துப் பணத்தை முதலீடு செய்வதைவிட தங்க முதலீடு மூலம் சேமிப்பைப் பாதுகாத்துக் கொள்வதை விரும்புகிறார் லோரீன். தங்கத்தில் முதலீடு செய்வது பணம் சேமிப்பதைவிட பலன் மிகுந்ததாக இவர் கருதுகிறார். காரணம், பணத் தாள்கள் அதிகமாக அச்சிடப்படும் நிலைமை ஏற்பட்டால் அதன் மதிப்பு குறைந்துவிடும். ஆனால் தங்கத்திற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லை.
நிதித் திறன் குறித்துப் பேசிய அவர், மக்கள் கொண்டுள்ள சில தவறான கருத்துகளைச் சுட்டிக்காட்டினார்.
ஓய்வுக்காலத்திற்குச் சேமிப் பதைப் பலர் தாமதமாகச் செய் கிறார்கள் என்றும் அதை வேலை பார்க்கத் தொடங்கும் காலத்திலிருந்தே தொடங்குவதை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆகையால், எவ்வளவு சீக்கிரமாகச் சேமிப்பைத் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் தொடங்க வேண்டும் என்பது இவரது பரிந்துரையாகும்.
அத்துடன், இந்தச் சேமிப்பை வங்கியில் வைத்திருப்பது சரி என்ற நம்பிக்கையும் தவறானது என்கிறார் இவர்.
சேமிப்பைப் பெருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைப் படித்து அறிந்துகொள்ள இவர் மக்களை ஊக்குவிக்கிறார்.
முழுநேர வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் அவர்களது சேமிப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கலாம் என்று இவர் கூறுகிறார்.
இதோடு, 'ஹியூகோசேவ்' வலைப்பதிவில் சேமிப்பு, முதலீடு, செலவினங்களைக் குறைப்பது போன்ற நிதித் திறன் தலைப்பு களைப் பற்றி மக்கள் படித்தறியலாம். இந்த வலைப்பதிவு அனை வருக்கும் இலவசமாக வழங்கப் படுகிறது.

