'பிரைம் டாக்சி' மீது கண் வைத்துள்ள கிராப் நிறுவனம்

'பிரைம் டாக்சி' மீது கண் வைத்துள்ள கிராப் நிறுவனம்

2 mins read
5850ae7a-e073-42c2-86cb-1884bcfaf067
பிரைம் டாக்சி நிறுவனத்தின் வாகனங்கள். இந்நிறுவனத்தை கிராப் வாங்க முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள ஆகப்­பெ­ரிய வாடகை வாகன நிறு­வ­ன­மான கிராப், மற்­றொரு நிறு­வ­ன­மான பிரைம் டாக்­சியை வாங்க முயற்சி செய்து வரு­கிறது.

கடந்த 2017ஆம் ஆண்­டில் எஸ்­எம்­ஆர்டி டாக்சி நிறு­வ­ன­மும் இதே போன்று விற்­கப்­ப­டு­வ­தாக பேச்சு எழுந்­தது.

இந்த நிலை­யில் கிராப், பிரைம் டாக்­சியை வாங்க விரும்­பு­வ­தா­க­வும் அதற்­கான பேச்சு வார்த்­தை­கள் நடை­பெற்று இறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே இது­வரை ஒப்­பந்­தம் எது­வும் கையெ­ழுத்­தா­க­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் பிரைம் டாக்சி, ஆகச்­சி­றிய வாடகை வாகன நிறு­வ­ன­மா­கும்.

ஆனால் 'டொயோட்டா ஆல்­ஃபர்ட்' போன்ற மதிப்­பு­மிக்க வாக­னங்­க­ளை­யும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த மின்­சார கார்­க­ளை­யும் அது வைத்து உள்­ளது.

பிரைம் டாக்­சியை நடத்­தும் பிரைம் குழு­மத்­தின் தலை­வ­ரான நியோ நாம் ஹெங், 2007ஆம் ஆண்­டில் வாடகை வாக­னச் சேவையை தொடங்­கி­யி­லி­ருந்து 50 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் லாபம் சம்­பா­தித்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

இது, சரா­சரி ஆண்­டுக்கு 3.3 மில்­லி­யன் வெள்­ளி­யா­கும். இதில் குழு­மத்­தின் தனி­யார் வாடகை வர்த்­த­கம் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

கிராப் தனது நிறு­வ­னத்தை வாங்­கு­வது குறித்து திரு நியோ கருத்து தெரி­விக்­க­வில்லை.

தான் மறுக்க முடி­யாத விலை கொடுக்­கப்­பட்­டால் வாடகை வாக­னச் சேவை­யை­யும் தனி­யார் வாடகை வர்த்­த­கத்­தை­யும் விற்­கத் தயா­ராக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

"எங்­க­ளு­டைய டாக்சி மற்­றும் தனி­யார் வாட­கைப் பிரிவு $100 மில்­லி­ய­னுக்கு மேல் சொத்­து­களை வைத்­துள்­ளது. எங்­க­ளுக்கு பெரி­தாக கடன் எது­வும் இல்லை. எல்லா நிறு­வ­னங்­க­ளை­யும்­போல எங்­கள் நிறு­வ­ன­மும் கடந்த இரண்டு ஆண்டு­க­ளா­கப் பாதிக்­கப்­பட்­டது. தற்­போது எல்­லை­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தால் எங்­க­ளு­டைய டாக்சி வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தி வரு­கி­றோம். நாங்­கள் எதிர்­பார்க்­கும் பணம் கிடைக்­கா­விட்­டால் நாங்­களே வாடகை வாக­னச் சேவையை நடத்­து­வோம். குறிப்­பாக சீனா­வி­லி­ருந்து சுற்­றுப்­ப­ய­ணி­கள் மீண்­டும் வரு­வார்­கள் என்­ப­தால் ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் உள்­ளன," என்று திரு நியோ தெரி­வித்­தார்.

பிரைம் டாக்சி தனது வர்த்­த­கத்தை விற்க $100 மில்­லி­ய­னுக்கு மேல் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் இது குறித்து பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறிய முடி­கிறது.

கிராப் நிறு­வ­னத்தை தொடர்­பு­கொண்டு இது குறித்து கேட்­ட­போது சந்­தை­யில் நில­வும் ஊகங்­ க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாது என்று கூறி­யது.

2017ல், எஸ்­எம்­ஆர்டி தனது டாக்சி சேவை நிறு­வ­னத்தை கிராப்­புக்கு விற்­கப் போவ­தாக பேச்சு எழுந்­தது.

விதி­மு­றை­கள் மற்­றும் நிபந்­த­னை­களில் ஏற்­பட்ட முட்­டுக்­கட்­டை­யால் அந்த ஒப்­பந்­தம் தோல்­வி­அடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.