மறுபடி காணத் தூண்டும் மறுபயனீட்டு அலங்காரம்

monolisa@sph.com.sg

கிறிஸ்­மஸ் பண்­டி­கையை முன்­னிட்டு மறு­ப­ய­னீட்­டுப் பொருள்­க­ளால் ஆன கிறிஸ்­மஸ் மரங்­க­ளின் கண்­காட்சி, 'சிட்டி ஸ்கு­வேர்' கடைத்­தொ­கு­தி­யில் நடை­பெற்று வரு­கிறது.

நீடித்த நிலைத்­தன்­மையை ஆத­ரிக்­கும் நோக்­கில் நேற்று துவங்­கப்­பட்ட இக்­கண்­காட்சி, அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

'இன்டு த கார்­டன் ஆஃப் ஈகோ கிறிஸ்­மஸ் டிரீஸ்' (Into the Garden of Eco Christmas Trees) என்ற கருப்­பொ­ரு­ளில் அமைந்த கண்­காட்­சி­யில் மறு­ப­ய­னீட்­டுப் பொருள்­க­ளைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட 12 கிறிஸ்­மஸ் மரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இம்­ம­ரங்­களை தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த 400க்கும் அதி­க­மான மாண­வர்­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

பயன்­ப­டுத்­தப்­பட்ட நெகி­ழித் தண்­ணீர்க் குடு­வை­கள், மரப்­ப­ல­கை­கள், குடை­கள், துணி­கள், பழைய அலங்­கா­ரப் பொருள்­கள் உள்­ளிட்ட பல்­வேறு பொருள்­க­ளால் இம்­ம­ரங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இப்­பொ­ருள்­களை கடைத்­தொ­கு­ தி­யின் 'என்­டி­யுசி ஃபேர்­பிரைஸ்', 'வாட்­சன்ஸ்', 'ஸ்டார்­பக்ஸ்', 'டிகெத்­லோன்' ஆகிய வர்த்­த­கங்­கள் வழங்­கி­யுள்­ளன.

மறு­ப­ய­னீட்­டுப் பொருள்­க­ளால் அதிக எண்­ணிக்­கை­யில் காட்­சிப்

படுத்­தப்­பட்­டுள்ள கிறிஸ்­மஸ் மரங்­கள் என்­ப­தால் சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­த­கத்­தி­லும் இம்­மு­யற்சி இடம்­பெற்­றுள்­ளது.

இதில் பங்­கேற்ற தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாணவி சுகா­சினி ராஜ், 21, தன் குழு­வு­டன் இணைந்து எஞ்­சிய பழைய துணி

­க­ளால் ஒரு கிறிஸ்­மஸ் மரத்தை உரு­வாக்­கி­யுள்­ளார்.

ஆடை வடி­வ­மைப்பு மற்­றும் வர்த்­த­கத் துறை­யில் இரண்­டாம் ஆண்டு கல்வி பயி­லும் இவர், அனைத்­துத் துணித் துண்­டு­க­ளை­யும் 'டை' (Tie) எனப்­படும் கழுத்­துப் பட்டை வடி­வில் வெட்டி இம்­ம­ரத்தை வடி­வ­மைத்­துள்­ளார்.

'டை' என்ற ஆங்­கில வார்த்­தைக்குக் கோத்தல் என்ற பொருள் என்­ப­தால் சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­

வ­ரும் இம்­ம­று­ப­ய­னீட்­டுப் புரட்­சி­யில் கைகோத்து செயல்­ப­ட­வேண்­டும் என்­பதை மறை­மு­க­மாக இம்­மு­யற்­சி­யின் மூலம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க அவர் கூறி­னார்.

சக மாண­வர்­க­ளு­டன் இணைந்து இதனை உரு­வாக்­கி­யது ஒற்­று­மை­யு­ணர்­வைத் தூண்­டி­ய­தோடு மறக்­க­மு­டி­யாத அனுபவ­மாக அமைந்த­தா­க­வும் கூறி­னார்.

இதற்­கி­டையே, பார்­வை­யா­ளர்­கள் கியூ­ஆர் குறி­யீட்டை வருடி, தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான மரத்­திற்கு வாக்­க­ளிக்­க­லாம். இதற்­கான இறுதி நாள் டிசம்­பர் 18. டிசம்­பர் 21ஆம் தேதி­யன்று சமூக ஊட­கப் பக்­கங்­களில் முடி­வு­கள் அறி­விக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!