பல்வேறு மோசடிகளில் $3.7 மில்லியனுக்கு மேல் பணம் பறிபோன விவகாரத்தில் சம்பந்ததப்பட்ட ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது தார்மிட்ஸி தாஹிர், 33, எனப்படும் அவர் இம்மாதம் 7ஆம் தேதி ஜோகூரில் கைது செய்யப்பட்டார்.
மோசடிப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்ள தமது வங்கிக் கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதித்ததாக ஒரு குற்றச்சாட்டும் இரு மோசடிக் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. வங்கியின் கணினிக் கட்டமைப்பை அனுமதியின்றி பயன் படுத்த உதவியதற்காக கணினி முறைகேட்டுச் சட்டத்தின்கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லை கடந்த மோசடிக் கும்பலைப் பிடிக்க சிங்கப்பூர் வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஜோகூர் வர்த்தக் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய வேட்டையில் இவர் சிக்கினார். அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் பிடிபட்ட இவர், பத்து நாள்களுக்குப் பிறகு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியில் தமது சொந்தப் பயன்பாட்டுக்காக கணக்குத் திறப்பதாகக் கூறி வங்கியை நம்பவைத்தார். பின்னர் தமது இணைய வங்கி உள்நுழைவு விவரங்களைப் பிறருடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
இதுபோல ஜனவரியிலும் பிப்ர
வரியிலும் பல்வேறு தடவை அனு
மதியின்றி வங்கிக் கட்டமைப்புக்குள் அவர்கள் ஊடுருவினர். இதேபோன்ற குற்றத்தை சிஐஎம்பி வங்கியிலும் கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மோசடிகளில் திரட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்திற்கு முகம்மது தார்மிட்ஸி பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் புகார் செய்யப்பட்ட முதலீட்டு மோசடி, வேலை மோசடி, நண்பர்போல ஆள்மாறாட்ட மோசடி, அரசாங்க அதிகாரிபோல ஆள்
மாறாட்ட மோசடி, கடன் மோசடி போன்றவற்றிலும் இ மோசடிகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பணமிழந்த விவகாரத்திலும் இவருக்குத் தொடர்பிருப்பதாக காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.மோசடிக் கும்பல் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் முயற்சிகளுக்கு ஃபேஸ்புக், டெலிகிராம் போன்றவற்றைப் பயன்
படுத்தி சிங்கப்பூர் வங்கிகளில் இவர் கணக்குத் தொடங்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரி யவந்துள்ளதாகவும் அது கூறியது.
இந்த வழக்கு நம்பவம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசடிக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கணினி முறைகேட்டுச் சட்டத்தின்கீழான ஒவ்வொரு குற்றத்திற்கும் முதல்முறையாகத் தண்டிக்கப்படுவோருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் போன்றவை விதிக்கப்படலாம். இந்தக் குற்றத்தை மீண்டும் செய்வோருக்கு மூன்றாண்டு வரையிலான சிறையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

