$88,000 கையாடல்: 15 ஆண்டுக்குப் பிறகு பிடிபட்டவர்மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள்

$88,000 கையாடல்: 15 ஆண்டுக்குப் பிறகு பிடிபட்டவர்மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள்

1 mins read
68123665-4785-4068-bd7e-ddfac9117ff3
-

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பணத்­தைக் கையா­டல் செய்­து­விட்டு 15 ஆண்டு­ க­ளா­கத் தலை­ம­றை­வாக இருந்த முன்­னாள் வழக்­க­றி­ஞர் ஒரு­வர் மீது மேலும் இரு நம்­பிக்கை மோசடிக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்டுள்­ளன.

டேவிட் கோங் சியாக் மெங், 55, எனப்­படும் அவர், டேவிட் கோங் அண்ட் அசோ­சி­யேட்ஸ் சட்ட நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரா­க­வும் வழக் கறி­ஞ­ரா­க­வும் இருந்­தார்.

2007ஆம் ஆண்டு ஏப்­ரல் 26 முதல் மே 5 வரை பாதிக்­கப்­பட்­ட­வர் ஒரு­வர் கொடுத்த $28,000 லிருந்து சுமார் $11,300ஐ கோங் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதே ஆண்­டில் இரண்டு பேரி­டம் வாங்­கிய $33,400 தொகை­யி­லி­ருந்து சுமார் $14,500ஐ கோங் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­னார்.

2007ஆம் ஆண்டு ஜூன் 11க்கும் 25க்குக் இடை­யில் மேலும் இரு­

வ­ருக்­குச் சொந்­த­மான $88,000ஐ தவ­றா­கப் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார் கோங்.

இந்த வழக்கு டிசம்­பர் 15ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. தமது கட்­சிக்­கா­ர­ரின் $88,000 பணத்தை கையா­டல் செய்­ததாக எழுந்த குற்­றச்­சாட்­டைத் தொடர்ந்து

2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தப்­பிச் சென்ற வழக்­க­றி­ஞர், அண்­மை­யில் சீனா­வில் பிடி­பட்­டார்.

சீனா­வின் பொதுப் பாது­காப்பு அமைச்­சின் உத­வி­யு­டன், கோங் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­டார். சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக விவ­கா­ரத் துறை அதி­கா­ரி­கள் அவ­ரைக் கைது செய்­த­னர்.