'கம்ப தரிசனம்' நூல் வெளியீடு

'கம்ப தரிசனம்' நூல் வெளியீடு

1 mins read
0e3cc2d6-43c9-40da-a901-6bd72f1b418d
-
Google News Preferred Icon

இசைக்கவி ரமணன் எழுதியுள்ள "கம்ப தரிசனம்" நூல் சிங்கப்பூரில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை

6.30 மணியளவில் உமறுப்புலவர் அரங்கில் வெளி யீடு காண்கிறது. லிஷா (லிட் டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடமைச் சங்கம்) மற்றும் லிஷா இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியைக் காண அனுமதி இலவசம். சட்ட, உள்துறை அமைச்சர்

கா சண்முகம் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என விழாக் குழு தெரிவித்துள்ளது. நூலை ஆய்வு செய்து ஜோதி மாணிக்க வாசகம், கண்ணன் சோஷாத்ரி போன்றோர் உரையாற்ற இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கம்பராமாயணத்தை ஆய்வு செய்து, கம்பனை ஒரு கவிஞனின் பார்வையில் எப்படிக் காணலாம் என்பது நூலில் வர்ணிக்கப்பட்டி ருக்கும். நிகழ்வின் இறுதி யில் நூலாசிரியர் இசையுரை வழங்குவார்.