சிறுவயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றம்: ஆடவர் ஒப்புக்கொண்டார்; தண்டனை பின்னர்

சிறுவயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றம்: ஆடவர் ஒப்புக்கொண்டார்; தண்டனை பின்னர்

2 mins read
2d3e9cef-e33c-44dc-9ac2-7651b339e7a1
-

தமது சொந்த மகளை நான்கு, ஐந்து வய­தாக இருந்­த­போது இரண்டு முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்ய முயன்­ற­ குற்றத்தை 37 வயது ஆடவர் ஒருவர் நேற்று உயர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

மருத்­து­வ­ம­னை­யில் உணவு பரி­மா­று­ப­வ­ரா­கப் பணி­பு­ரிந்த மலே­சிய ரான இவர், 2013ஆம் ஆண்டு வாக்கில் தமது மகளை பாலி­யல் வன்­கொ­டுமை செய்ய முயன்­ற­தாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டு களையும் ஒப்புக் கொண்டார்.

தற்போது 13 வயதாகும் சிறுமி, தொடக்கநிலை ஐந்தில் பாலியல் கல்வி பயின்றபோதுதான், தமது தந்தை செய்தது தவறு என்பதை உணர்ந்தார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு மற்ற துன்­பு­றுத்­திய சம்­ப­வங்­கள் குறித்த விவ­ரங்­களை நினை­வில் கொள்ள முடி­ய­வில்லை என்­றும் அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

தமது நண்­பர்­கள் தம்மை ஒதுக்­கி­வி­டு­வார்­கள் என்­றும் தந்தை சிறை­யில் அடைக்­கப்­பட்­டால், தமது தாயார் தனி­யாக குடும்­பத்தை ஆத­ரிக்க வேண்­டும் என்றும் பயந்­த­தால், தமக்கு நடந்த வன்­கொ­டு­மையை யாரி­ட­மும் அச்சிறுமி சொல்­ல­வில்லை.

பாதிக்­கப்­பட்ட சிறுமி தமக்கு நடந்த வன்­கொ­டு­மைக்கு தம்மைத் ­தாமே பழி­கூறி, தன்­னைக் காயப்­படுத்­தத் தொடங்­கி­னாள். இவ்வாண்டு ஜன­வரியில் சிறு­மி­யின் கைகளில் காயங்­களைக் கவ­னித்த ஆசி­ரி­ய­ரி­டம் சிறுமி நடந்­ததை கூறி­னார்.

பின்­னர் சமுதாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சின் சிறார் பாதுகாப்பு அதி­கா­ரி­யும் பள்ளி ஆலோ­ச­க­ரும் சிறு­மியை பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர். இது­கு­றித்து காவல் துறை­யி­டம் மருத்­து­வ­மனை புகார் செய்­தது.

இந்த வண்­கொ­டு­மை­யி­னால், பாதிக்­கப்­பட்ட்ட சிறு­மிக்கு பல மன­நலப் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன. கடந்த ஏப்­ரல் 12ஆம் தேதிக்கும் செப்­டம்­பர் 7ஆம் தேதிக்கும் இடைப்பப்பட்ட காலத்தில், சிறுமி 17 முறை மன­நல ஆலோ­சனை பெறச் சென்­றாள். மனச்சிதைவை ஏற்படுத்தும் அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டி ருப்பதால் குற்ற வாளிக்கு எட்டரை ஆண்டு முதல் ஒன்பதாண்டு வரை யிலான சிறைத் தண்டனை விதிக்கு மாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரி னார்.

இருப்பினும் குற்றத்தை சீக் கிரமே ஒப்புக்கொண்டதால் இதை விடக் குறைவான தண்டனை விதிக் குமாறு தற்காப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

தண்­டனை முடிந்­த­தும் அந்த ஆட­வர் சொந்த நாட்­டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்­றும் அவ­ரது மனைவி அவரை விவா­க­ரத்து செய்­யும் நிலை­யில் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

பாலி­யல் வன்­கொ­டுமை முயற்­சி­யின் ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் குறைந்­த­பட்ச தண்­டனை என்­ன­வாக இருக்க வேண்­டும் என்­பது குறித்த விவாதங்களுக்கு இடையே வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.