சிறைச்சாலைக்குள் லஞ்சம்: ஐவர் மீது குற்றச்சாட்டு

சிறைச்சாலைக்குள் லஞ்சம்: ஐவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ed2a84f8-e90f-4dca-94ec-5db10d09a9ae
-

தங்­க­ளுக்­காக தூக்க மாத்­தி­ரை­களை வாங்­க­வும் அவற்றை மற்ற கைதி­க­ளுக்­குக் கடத்­த­வும் சிறைக் கைதி­கள் நால்­வர் சிறை கண்­கா­ணிப்­பா­ளர் ஒரு­வ­ருக்கு $1,200 லஞ்­சம் கொடுத்­த­னர்.

கெல்­வின் ஆங் வெய் ஷெங், 39, எனப்­படும் அந்த முன்­னாள் அதி­காரி கடந்த ஆண்டு செப்­டம்­ப­ருக்­கும் அக்­டோ­ப­ருக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் லஞ்­சம் பெற்ற குற்­றம் புரிந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முஹம்­மது ஷைஃபுல்லா அப்­துல் லத்­திஃப், 36, சிடேக் ஜமா­லு­தீன், 42, ஐரீஸ் ரஹ்­மான், 50, மற்­றும் இஸ்­மா­யில் மசூன் முல்லா, 57, ஆகிய நால்­வ­ரி­ட­மி­ருந்­தும் அவர் லஞ்­சம் பெற்­ற­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அப்­போது அவர் நியூ ஹோப் என்­னும் உணவு நிறு­வ­னத்­தின் கண்­கா­ணிப்­பா­ள­ராக வேலை செய்­தார்.

லஞ்­சம் பெற்­றது, லஞ்­சம் கொடுத்­தது ஆகி­யன தொடர்­பில் இந்த ஐவர் மீதும் நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

ஆங் மீது ஐந்து ஊழல் குற்­றச்­சாட்­டு­களும் இஸ்­மா­யில் மீது இரு ஊழல் குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டன.

இதர மூவர் மீதும் தலா ஒரு லஞ்­சக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. நான்கு கைதி­களும் ஆங்­கி­டம் $200க்கும் $500க்கும் இடைப்­பட்ட தொகையை லஞ்­ச­மா­கக் கொடுத்­த­னர்.

ஆங் லஞ்­சம் பெற்ற குற்­றச்­சாட்டு கடந்த ஆண்டு அக்­டோ­பர் தொடக்­கத்­தி­லேயே தெரிய வந்­த­தாக சிங்­கப்­பூர் சிறைச் சேவை நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

சிறைக் கைதி­க­ளின் அறை­க­ளி­லும் பொதுப் பகு­தி­யி­லும் அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி, மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மாத்­தி­ரை­க­ளைக் கண்­டு­பி­டித்­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.