மனநலன்: 140 வல்லுநர்கள் மற்றவர்களுக்கு உதவுவர்

மனநலன்: 140 வல்லுநர்கள் மற்றவர்களுக்கு உதவுவர்

1 mins read
d4454df2-1913-4464-a920-fa1a2ae0d3f2
-

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வோ­ருக்கு உத­வும் வகை­யில் 140க்கும் மேற்­பட்­டோருக்குப் பயிற்சி அளிக்­கப்­பட்டுள்ளது.

மன­ந­லப் பிரச்­சி­னை­களில் இருந்து விடுபட்டுள்ள அந்­தப் பயிற்­சி­யா­ளர்­கள் இப்­போது தங்கள் சகாக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­குத் தோதாக சிறப்பு வல்­லு­நர்­க­ளாக ஆகியுள்ளனர்.

தேசிய சமூ­கச் சேவை மன்றம் இதற்­காகச் சிறப்பு வல்­லு­நர்­கள் சக ஆத­ரவு செயல்­திட்­டம் என்ற ஒரு திட்­டத்தை 2016ல் தொடங்­கி­யது. மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வோ­ருக்­குப் பயிற்சி மூலம் புதிய தேர்ச்­சி­கள் போதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

அத்­தகைய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் மற்­ற­வர்­கள் குண­ம­டைய உத­வு­வ­தற்கு பொருத்­த­மாக அவர்­கள் உள்ளனர்.

பயிற்சி பெற்­ற­வர்­களில் ஏறக்­கு­றைய பாதிப்­பேர் சக ஆத­ரவு சிறப்பு வல்­லு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். அவர்­கள் சமூ­கச் சேவை அமைப்­பு­களி­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களி­லும் தொண்டு செய்­வதாக இந்த மன்­றத்­தின் சேவை­கள் துறை இயக்­கு­நர் சிம் ஹுய் டிங் தெரி­வித்­தார்.