இன, சமயம் பற்றி இளையர் விவாதிக்க உதவ அட்டை விளையாட்டு உத்தி தொடக்கம்

இன, சமயம் பற்றி இளையர் விவாதிக்க உதவ அட்டை விளையாட்டு உத்தி தொடக்கம்

2 mins read
0d8c7153-9dab-48c3-93dc-14b929c2e0d8
-

தேசிய இளை­யர் மன்­றத்­தின் முதலா­வது பொது­மக்­கள் கலந்­துரை­யா­டல் அட்டை விளை­யாட்டு நேற்று தொடங்­கி­யது.

அந்­தத் தொடக்க நிகழ்ச்­சி­யின்­போது பல சமய, இன பிரச்­சி­னை­கள் பற்றி விவா­திக்­கப்­பட்­டன.

'போல்டு அட் ஒர்க்' என்ற கல்வி நிலை­யம், 'தி ஒயிட்­ஹேட்­டர்ஸ்' என்ற அரசு சாரா அமைப்பு ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து முன்­னே­றும் சிங்­கப்­பூர் இயக்க குடி­மக்­கள் கலந்­து­ரை­யா­டல் அட்டை விளை­யாட்டு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்த விளை­யாட்டு, அனைத்து சமய, இன கலந்­து­ற­வா­டல்­கள் பற்றிய தங்­க­ளு­டைய கருத்­து­களை நேர்­மை­யான முறை­யில் பகிர்ந்­து­கொள்­ளும் அதே­வேளை­யில், உரிய கவ­னத்­தோ­டும் மற்­ற­வர்­க­ளின் மனப்­பாங்கை அறிந்­தும் கலந்­துரை­யா­டல்­களில் எவ்வாறு ஈடு­படலாம் என்­பது பற்றி சிங்­கப்­பூ­ரர்­களுக்கு வழி­காட்டும்.

ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் நடந்த தொடக்க நிகழ்ச்சி­யில் தொடர்பு தக­வல், சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் சகிப்­புத்­தன்­மைக்கு அப்­பா­லும் மக்­கள் செயல்­பட வேண்டி இருக்­கிறது என்­பதை அவர் தமது உரை­யில் சுட்­­டி­னார்.

சிங்­கப்­பூ­ருக்குப் பலத்­தை­யும் தேசிய அடை­யா­ளத்­தை­யும் ஏற்­படுத்தித் தரு­கின்ற பல கலா­சார, பன்­முகத் தன்­மையைப் புரிந்­து­கொண்டு அதைப் போற்றிப் பாராட்டும் உண்­மை­யான உணர்­வு­டன் மக்­கள் திகழ வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

இனம், சம­யம் பற்­றிய ஆக்­க­க­ர­மான கலந்­து­ரை­யா­டல்­கள், சிங்­கப்­பூ­ரர்­கள் ஐக்­கி­ய­மாக ஒன்­றா­கச் சேர்ந்து முன்­னே­று­வ­தற்கு உத­வும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

நேற்­றைய தொடக்க நிகழ்ச்­சி­யில் 18 முதல் 35 வரை வய­துள்ள ஏறக்­கு­றைய 70 பேர் பங்கேற்றனர்.

அவர்­கள், சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், (சிண்டா) யுரே­ஷி­யர் சங்­கம் போன்ற சுய உத­விக் குழுக்­க­ளை­யும் இளையர் மன­ம­கிழ் மன்­றங்­களையும் மாண­வர் சங்­கங்­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள்.

இத­னி­டையே, சிண்டா, மெண்­டாக்கி போன்ற சுய­உ­த­விக் குழுக்கள் மூல­மா­க­வும் உயர் கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் கட்­ட­மைப்பு வழி­யா­க­வும் விளை­யாட்டு அட்­டை­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்றும் இதபோல் மேலும் திட்டங்கள் உள்ளதாகவும் இந்த மன்­றம் தெரி­வித்து உள்­ளது.