நாடு முழுவதும் உள்ள அக்கம் பக்கங்களில் விரைவில் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் இரைச்சல் இல்லா நேரமாக திகழவிருக்கிறது.
இத்தகைய விதிகள் அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவே ஓர் அமைப்பு செயல்படும்.
அக்கம்பக்க இரைச்சல் பற்றிய சமூக ஆலோசனைக் குழு ஆறு மாத கலந்துரையாடல் இயக்கத்தை நடத்தி தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இப்போது இரைச்சல் இல்லா நேரம் இரவு 10.30 மணி முதல் காலை 7 மணி வரைப்பட்டதாக இருக்கிறது. இந்த நேரத்தை இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அந்தக் குழு முக்கியமாகப் பரிந்துரைத்து இருக்கிறது.
அக்கம்பக்க இரைச்சல் பிரச்சினையைக் கவனிப்பதற்காகவே ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்து இருக்கிறது.

