புக்கிட் பாத்தோக்கில் ஆறாண்டு காலமாக புதுப்பிப்புப் பணிகள் நடந்து வந்த ஸு-லின் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு, இப்போது இரண்டு மடங்கு பெரியதாக கட்டப்பட்டு இருக்கும் அந்த ஆலயத்தின் 33வது ஆண்டுவிழாவும் நேற்று நடந்தது. இதனையொட்டி பல சமயங்களைச் சேர்ந்த 18 அமைப்பு களுக்கு மொத்தம் $135,000 நன்கொடை வழங்கப்பட்டது.
ஜாமியா சிங்கப்பூர், ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், குவோங் வாய் ஷு மருத்துவமனை ஆகியவை அந்த அமைப்புகளில் சிலவாகும்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அந்த ஆலயத்தின் பெருந்தன்மை குணத்தையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற இனத்தவர்களையும் பாராட்டினார்.

