நிலப் போக்குவரத்து ஆணைய கட்டணப் பட்டியல் அல்லது செலுத்தப்படாத அபராதம் சம்பந்தப்பட்ட மோசடிகள் தொடர்பில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 112 புகார்கள் காவல்துறையில் தாக்கலாகி இருக்கின்றன.
மோசடிப் பேர்வழிகளிடம் குறைந்தது $133,000 பணத்தை அப்பாவிகள் இழந்து இருக்கிறார்கள் என்று வெள்ளிக்கிழமை காவல்துறை தெரிவித்தது.
நிலப் போக்குவரத்து ஆணை யம் தனது குறுஞ்செய்தியில் யூஆர்எல் இணைப்பு வழி பணம் செலுத்துமாறு ஒருபோதும் கேட்காது என்பதை காவல்துறை மக்களுக்கு நினைவூட்டியது.
அத்தகைய செய்தியில் இருக்கும் யூஆர்எல் இணைப்பைப் பயன்படுத்தி சொந்த விவரங்களைக் கொடுத்து மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என்று மக்களுக்கு அது ஆலோசனை கூறியது.

