‘பொதுமக்களின் பாதுகாப்பை அலட்சியமாகக் கருத இயலாது’

ஆர்ச்­சர்ட் ரோட்­டில் ஆண்­டி­றுதி விழா கொண்­டாட்ட காலத்­தின்­போது மிக அதிக கூட்­டம் திர­ளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்­தச் சூழ­லில் பொது­மக்­கள் பாது­காப்பைக் கிள்­ளுக்­கீ­ரை­யா­கக் கருத இய­லாது என்று நேற்று காவல்­துறை தெரி­வித்­தது.

இதைக் கருத்­தில்கொண்டு கூட்­டம் அதி­க­மா­கக் கூடக்­கூ­டிய குறிப்­பிட்ட சில இடங்­களில் வீதி கலை நிகழ்ச்­சி­களுக்குத் தடை விதிக்­கும்­படி தேசிய கலை­கள் மன்­றத்­திற்கு இந்­தத் துறை பரிந்­து­ரைத்து இருந்­தது.

தென்­கொ­ரி­யா­வில் 150க்கும் மேற்­பட்ட மக்­க­ளைப் பலி­கொண்ட கூட்ட நெரி­சல் சம்­ப­வம், பொது­மக்­கள் பாது­காப்பை அலட்­சி­ய­மா­கக் கரு­தக்­கூ­டாது என்­பதை நினைவு­ப­டுத்­தும் ஒன்­றாக இருக்­கிறது என்று ஊட­கத்­தின் கேள்­வி­ க­ளுக்குப் பதி­ல­ளித்த காவல்­துறை தெரி­வித்­தது.

ஆகை­யால், கூட்­டத்­தைக் கட்டுப்­ப­டுத்த பொருத்­த­மான நட­வடிக்­கை­கள் இடம்­பெற வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

ஆர்ச்­சர்ட் ரோடு வட்­டா­ரத்­தில் இருக்­கும் ஏழு கடைத்­தொ­கு­தி­களுக்கு வெளியே டிசம்­பர் 24, டிசம்­பர் 31 உள்­ளிட்ட குறிப்­பிட்ட நாள்­களில் வீதி கலை நிகழ்ச்­சி­களை நடத்த இய­லாது என்று தேசிய கலை­கள் மன்­றம் தெரி­வித்து இருக்­கிறது.

இதுபற்றி கருத்துக் கூறிய தெருக் கலை­ஞர்­கள் சங்­கம், இந்தத் தடை கார­ண­மாக தெருக் கலை­ஞர்­க­ளுக்கு வரு­மா­னம் பாதிக்­கப்­பட்­டு­வி­டும் என்று கவலை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் மிக முக்­கி­ய­மான ஆர்ச்­சர்ட் ரோடு பகு­தி­யில் விழாக்­கால கொண்­டாட்­டங்­க­ளுக்கு தெருக் கலை­ஞர்­கள் சுவை சேர்க்­கி­றார்­கள் என்­பதை அது சுட்­டி­யது.

இத­னி­டையே, இந்த ஆண்­டு அள­வுக்கு அதிக கூட்­டத்­தைத் தவிர்க்­கும் வகை­யில் குறிப்­பிட்ட இடங்­கள் மூடப்­படும் என்­றும் அப்­போது அது பற்றி பொது­மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­படும் என்­றும் தெரி­வித்த காவல்­துறை, அதி­கா­ரி­கள் பணி­யில் இருந்து மக்­களுக்கு உதவு­வர் என்­றும் குறிப்­பிட்­டது.

அத்­த­கைய பகு­தி­களில் தடை­கள் அமைக்­கப்­படும் என்­றும் அது தெரி­வித்­தது.

சூழ்­நி­லையைப் புரிந்­து­கொண்டு தேசிய கலை­கள் மன்­றம் காவல்­து­றை­யோடு சேர்ந்து செயல்­பட்டு இருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!