இலகுரக மின்சார சரக்கு வாகனங்களின் பதிவு சிங்கப்பூரில் அதிகமாகி வருகிறது.
கடந்த பத்து மாதங்களில், புதிதாகப் பதியப்பட்ட அத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மின்சாரத்தைப் பகுதியாகவோ முழுமையாகவோ பயன்படுத்தி செயல்பட்ட 578 வாகனங்கள் சிங்கப்பூரில் பதிவாகியிருந்தன. இவ்வாண்டு அக்டோபரில் அந்த எண்ணிக்கை 1,598 ஆகும். ஜனவரி முதல் ஜூன் வரை ஒப்பிடும்போது, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை கூடுதல் வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் சாலைகளில் தற்போது 162,625 மின்சார வாகனங்கள் செயல்படுகின்றன. இலகுரக மின்சார சரக்கு வாகனங்கள் அவற்றில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே. இலகுரக மின்சார சரக்கு வாகனங்கள் மூன்றரை டன் வரை எடையுள்ளவை ஆகும். சிறுலாரிகள், சிற்றுந்துகள், பால்வண்டிகள் போன்றவை அவை.

