சமூக ஊடகங்களும் கைபேசிப் பயன்பாடும் பெருகியுள்ள சூழலில் குழுவாகப் பணியாற்றுதல், பிரச்சினைகளைக் கையாளுதல், பகுத்தறிவு போன்ற திறன்களைப் பழகிக்கொள்ள இளையர்களுக்கு போதிய வாய்ப்புகள் இன்று இல்லாதிருக்கலாம்.
தனிமை, ஒட்டாமை, கோபம் போன்றவற்றின்வழி அவர்கள் மனஉணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்றார் மனநலக் கழகத்தின் வளர்ச்சி சார்ந்த மனநல மருந்தியல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஓங் சே ஹாவ்.
முன்னாள் ஆசிரியையான ஃபயீசா சிராஜுதின், சிங்கப்பூர் இளையர்களுக்குத் தன்முனைப்பும் தலைமைத்துவமும் போதவில்லை என்று கவனித்துள்ளதாகக் கூறினார்.
'ஃபேஸ் தி ஃபியூச்சர்' எனப்படும் கல்விசார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தை ஃபயீசாவும் சுனிதா வெங்கட்ராமன் என்பவரும் கூட்டாகத் தொடங்கியுள்ளனர். இளையர்கள் 'இலகுவான' திறன்களைக் கற்றுப் பழகிக் கொள்ள உதவும், தி கிரேக்கர்ஜாக் கன்வென்ஷன் எனும் நான்கு நாள் நிகழ்ச்சிக்கு அவர்களின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முகாம் நடைபெறும்
விளையாட்டுகளின்வழி இலகுத் திறன்களை இளையர்களுக்குக் கற்பிப்பது நிகழ்ச்சியின் நோக்கம்.