‘நல்லுறவை வளர்த்துக்கொண்டேன்’

இளம் செய்­தி­யா­ளர்­க­ளாக நாங்­கள் எங்­கள் பள்­ளி­யின் முன்­னாள் மாணவி­யான விஜ­ய­ஸ்ரீ ஈஸ்­வ­ரனை பேட்டி கண்­டோம்.

குவீன்ஸ்­ட­வுன் உயர்­நி­லைப் பள்­ளி­யில் அவர் பயின்ற காலத்­தில் அவ­ருக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளை­யும் சம்­ப­வங்­க­ளை­யும் பற்றி கேட்­டு அறிந்­தது ஆர்­வ­மூட்­டு­வ­தாக இருந்­தது. அதே­ச­ம­யம் அவ­ரது வாழ்க்­கைக் கதை­யைக் கேட்­பது எங்­களுக்­கும் உற்­சா­க­மாக இருந்­தது.

"நான் குவீன்ஸ்­ட­வுன் உயர்­நிலைப் பள்ளி மாண­வர் ஆன­தால் இன்று நல்ல நிலை­மை­யில் இருக்­கி­றேன்," என்று பேட்­டி­யின்­போது எங்­க­ளி­டம் கூறி­னார் அவர்.

உயர்­நி­லைப் பள்­ளிக்கு வந்­த­போது அமை­தி­யா­க­வும் தயக்­கம் நிறைந்­த­வ­ரா­க­வும் இருந்­தார். அவ­ரது நிலை­ய­றிந்து அவ­ரின் தமி­ழ் ஆசி­ரி­யர் அவ­ருக்கு உதவ முன்­வந்­தார்.

தோழி­யாக, தாயாக இருந்த அந்த ஆசி­ரி­யர் அன்­பும் அர­வ­ணைப்­பும் தந்து தன்­னைச் செம்­மைப்­

ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னார் விஜயஸ்ரீ. மற்­ற­வர்­க­ளி­டம் கூற முடி­யா­ததை விஜ­ய­ஸ்ரீ தன் ஆசி­ரி­ய­ரி­டம் கூறி­னார்.

இவ்­வாறு மன­தில் உள்­ளதை வெளிப்­ப­டுத்த முயன்­ற­தால் நாள­டை­வில் தன்­னம்­பிக்­கை­யு­டன் பிற­ரு­டன் பேசிப் பழ­கும் குணத்தை அவர் பெற்­றார்.

மருத்­து­வத் துறை­யில் அவ­ருக்­குப் பெரும் ஈடு­பாடு இருந்­தது. அத­னால், அவர் செஞ்­சி­லு­வைச் சங்க இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில் சேர்ந்­தார். இத­னால், அவர் உயர்­கல்­வி­யி­லும் மருத்­து­வம் தொடர்­பான படிப்பை மேற்­கொண்­டார்.

இன்று தாதி ஆவ­தற்கு அவர் படித்து வரு­கி­றார். தன்­னு­டைய சக நண்­பர்­க­ளு­டன் நல்­லு­றவை வளர்த்­துக்­கொண்­டுள்­ளார். விலங்­கு­

க­ளுக்கு மருத்­து­வச் சேவை வழங்­கும் பணி­யில் தற்போது அவர் இருக்­கி­றார். உயர்­நி­லைப் பள்ளி வாழ்க்கை முடிந்த பின்­ன­ரும் தன்­னு­டைய தமி­ழா­சி­ரி­ய­ரு­டன் தொடர்ந்து பேசி வரு­வ­தாகப் பகிர்ந்­து­கொண்­டார்.

செய்தி: ஜாய்ஸ்லின் கெட்ஸியா, மகதி தங்கதுரை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!