பணிப்பெண் கொல்லப்பட்ட வழக்கு: மகளோடு சேர்ந்து தாமும் துன்புறுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மாது

சிங்கப்பூரில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், காயத்திரி முருகையனின் தாயார் பிரேமா எஸ்.நாராயணசாமி, தாமும் அந்தப் பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரேமா, 64, வேண்டுமென்றே பணிப்பெண்ணைக் காயப்படுத்தியதாக 47 குற்றச்சாட்டுகளையும் அவருக்கு காயம் ஏற்படுத்த முயன்றதாக ஒரு குற்றச்சாட்டையும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தடயங்களை மறைத்ததாக தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் அவர் வழக்கு விசாரணை கோரியுள்ளார்.

பிரேமாவுக்கு எதிராக முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அக்குற்றச்சாட்டில் இருந்து அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

அந்தக் கொடூர வழக்கில் பியாங் காய் டோன், 24, எனும் மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண் பட்டினியிடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

சிங்கப்பூரில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட ஆக மோசமான வழக்குகளில் அதுவும் ஒன்று.

குமாரி பியாங் உயிருடன் இருந்த இறுதி 12 நாள்களில் அவர் இரவுநேரங்களில் சன்னல் கம்பிகளில் கட்டப்பட்டார். அந்த அறையின் தரையில் பியாங் படுத்திருக்க, குற்றஞ்சாட்டப்பட்ட பிரேமா மெத்தையில் தூங்கி இருந்தார்.

2015ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காயத்திரியின் வீட்டில் பணியாற்றத் தொடங்கியபோது குமாரி பியாங்கின் எடை 39 கிலோகிராமாக இருந்தது. 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கடைசியாக தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தபோது அவரது எடை வெறும் 24 கிலோகிராம் மட்டுமே.

பீஷானில் உள்ள காயத்திரியின் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளிகள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் காட்டப்பட்டன.

அவற்றில் பிரேமாவும் அவருடைய மகள் காயத்திரியும் குமாரி பியாங்கை பலமுறை அடித்து, உதைத்து துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றன.

ஒரு காணொளியில், குமாரி பியாங்கின் தலைமுடியைப் பிடித்து தரையில் இழுத்து, பின்னர் தலைமுடியைப் பிடித்து பிரேமா மேலே தூக்கினார்.

துணிகளைக் காயவைக்கும் மூங்கில் கம்பால் பிரேமா பணிப்பெண்ணை அடித்ததும் காணொளியில் காட்டப்பட்டது.

வேறு சில காணொளிகளில், குமாரி பியாங் கழிவறையில் இருந்தபோது பிரேமா அவரை வேகமாக உலுக்கி, அடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றன.

கழுத்தில் பலத்த அடிபட்டு மூளையில் காயம் ஏற்பட்டதால் குமாரி பியாங் இறந்ததாக மரண விசாரணை அறிக்கை குறிப்பிட்டது. முகம், கழுத்து, கை, கால் உட்பட பணிப்பெண்ணின் உடலெங்கும் அண்மையில் ஏற்பட்ட 31 தழும்புகளும் 47 வெளிப்புறக் காயங்களும் இருந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் காயத்திரிக்கு கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளின் கடுமையைக் குறைத்தல், தண்டனை விதிப்பு ஆகியவற்றுக்காக பிரேமாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!