லோர்னி சாலையை நோக்கிச் செல்லும் பிரேடல் சாலையில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய இருவர் திங்கள்கிழமை காலை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான 26 வயது பெண், அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, 65 வயதான சிற்றுந்து ஓட்டுநர் ஆகியோர் விபத்தில் சிக்கியதாக காலை 8.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிளில் இருந்த இருவரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சிற்றுந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.


