சிறப்புத் தேவையுடைய 4 வயது சிறுவனைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்

சிறப்­புத் தேவை­க­ளு­டைய நான்கு வய­துச் சிறு­வனை, உடல்­ரீ­தி­யா­கத் துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்டை பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார். தன் பரா­ம­ரிப்­பில் இருந்­த சிறு­வ­னைத் துன்­பு­றுத்­தி­ய­து­டன் கழுத்­தில் இருந்த கீறல்­க­ளைப் பற்றி கேட்­கப்­பட்­ட­போது அவர் உண்­மையை மறைத்­தார்.

இதன் தொடர்­பான ஒரு குற்­றச்­சாட்டை நேற்று அந்த 51 வயது மாது ஒப்­புக்­கொண்­டார்.

பள்­ளி­யில் 2013ஆம் ஆண்­டு­முதல் சீன­மொழி கற்­பித்து வந்­தார் அந்த மாது. குளி­யல், உணவு ஊட்­டு­தல், வெளிப்­புற விளை­யாட்­டு­கள் ஆகிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் சிறு­வர்­க­ளுக்கு உத­வும் பொறுப்­பு அந்த மாதி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

அதை­ய­டுத்து, 2020ஆம் ஆண்­டில் பாதிக்­கப்­பட்ட அந்­தச் சிறு­வனுக்கு மாது கற்­றுக்­கொ­டுக்­கத் தொடங்­கி­னார்.

சிறு­வ­னுக்­குப் பேச்சு தொடர்­பான வளர்ச்­சிக் குறை­பாடு உள்­ள­தா­க­வும் சிறு­வ­னுக்கு 'ஆட்­டி­சம்' உள்­ளது என 2017ல் மதிப்­பி­டப்­பட்­ட­தா­க­வும் மாது அறிந்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், டிசம்­பர் 2, 2020ல் பிற்­ப­கல் 12.30 மணி­ய­ள­வில் சிறு­வனை உறங்க வைக்க முடி­யா­மல் மாது எரிச்­ச­ல­டைந்­தார்.

தனக்­குக் களைப்­பா­க­வும் பசி­யா­க­வும் இருந்­த­தாக மாது கூறி­யி­ருந்­தார்.

சிறு­வ­னின் தோளைப் பிடித்து இழுத்­தல், இடது கையைப் பிடித்­த­வாறு தரை­யில் இழுத்­துச் செல்­லு­தல், காது­க­ளைத் திரு­குதல், கழுத்­தைக் கீறு­தல் எனச் சிறு­வனை மாது துன்­பு­றுத்­தி­யது பள்­ளி­யின் காணொளி கேமராவில் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!