'ஓ' நிலை மோசடி சம்பவம்: வாதங்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

'ஓ' நிலை மோசடி சம்பவம்: வாதங்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

1 mins read
a8bdf7f0-52d8-49e0-9b14-7fe942fb9fdf
-

துணைப்­பாட நிலை­யம் ஒன்­றின் முதல்­வ­ரும் அதில் பணி­பு­ரிந்த மூன்று துணைப்­பாட ஆசி­ரி­யர்­களும் 'ஓ' நிலைத் தேர்­வின்­போது ஆறு மாண­வர்­க­ளுக்கு உத­வி­ய­தன் தொடர்­பில், இரு­வ­ரின் மேல்­மு­றை­யீடு நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

தங்­க­ளின் தண்­ட­னைக்கு எதி­ராக நிலை­யத்­தின் முதல்­வர் போ யுவென் நியெ, அவ­ரின் உற­வி­ன­ரான முன்­னாள் துணைப்­பாட ஆசி­ரி­யர் ஃபியோனா போ மின் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­ததை அடுத்து, அவர்­கள் முன்­வைத்த வாதங்­களை நீதி­மன்­றம் நிரா­க­ரித்­தது. தங்­க­ளின் செயல் 'நேர்­மை­யற்­றது' எனக் கருத முடி­யாது என இரு­வ­ரும் வாதிட்­ட­னர்.

தவ­றான முறை­யில் ஒரு­வ­ரது சொத்தை அப­க­ரிப்­ப­தும் ஒரு­வர் தன் சொத்தை இழப்­ப­தும் இச்­சம்­ப­வத்­தின்­போது நிக­ழ­வில்லை என்­ப­தால் தங்­க­ளின் மீதான மோச­டிக் குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மா­வது ஏற்­பு­டை­ய­தல்ல என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

துணைப்­பாட நிலை­யத்­தின் முன்­னாள் ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளின் மாண­வர்­கள் மீது தொலைத்­தொ­டர்பு சாத­னங்­களை ஒட்­டி­ய­து­டன் அவர்­களில் ஒரு­வர் தனி­யார் மாண­வ­ரா­க­வும் தேர்வு எழு­தி­னார்.

தனி­யார் மாண­வ­ரா­கத் தேர்வு எழு­திய டான் ஜியா யான், ஒரு கை­பே­சி­யைத் தன் நெஞ்­சுப் பகு­தி­யில் ஒட்­டி­ய­வாறு தேர்­வுத்­தாளை நேர­டி­யா­கத் தன் சக ஆசி­ரி­யர்­களுக்­குக் காண்­பித்­தார். கேள்வி­களுக்­கான பதில்­க­ளைப் பின்­னர் ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளின் மாண­வர்­க­ளி­டம் செவி ஒலிப்­பான்­வழி ரக­சி­ய­மா­கத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.