போலி நிறுவனம் மூலம் $8 மில்லியன் மோசடி

சட்­ட­வி­ரோ­தக் கும்­ப­லைச் சேர்ந்த 44 வயது ஆல்­வின் சுவா ஹான் சூன், 'நாகூர் டிரே­டிங்' என்ற போலி நிறு­வ­னத்­தின்­கீழ் 180க்கும் மேற்­பட்ட கட்­ட­ணங்­கள் தொடர்­பில் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்­த­து­டன் நிறு­வ­னம் குறைந்­தது $56 மில்­லி­யன் ஈட்­டி­யுள்­ள­தா­க­வும் போலித் தக­வல் அளித்­தி­ருந்­தார்.

போலி நிறு­வ­னம் தொடர்­பான குற்­றங்­க­ளின் விளை­வாக சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் (ஐஆர்­ஏ­எஸ்) கிட்­டத்­தட்ட $8 மில்­லி­யன் மதிப்­பி­லான மோசடி உள்­நாட்டு உள்­ளீட்டு வரிக் கோரிக்­கை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

இந்­தக் கோரிக்­கை­களில் ஒரு சில­வற்­றைக் ஐஆர்­ஏ­எஸ் கண்­டறிந்து தடுத்து வைத்­த­போ­தும் பொருள், சேவை வரி தொடர்­பில் திருப்­பித் தரப்­பட்ட வரிப்­ப­ணத்­தின் அளவு ஒரு கணி­ச­மான தொகை என்று விசா­ர­ணை­க­ளின் வழி தெரி­ய­வந்­துள்­ளது.

நிறு­வ­னத்­தின் வர்த்­த­கத்தை மோச­டிக் கார­ணத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­தி­யது தொடர்­பில் குற்­றத்தை சுவா ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, நேற்று சுவா­வுக்கு நான்கு ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிக்­கல்­மிக்க, பெரு­ம­ள­வி­லான இந்த விவ­கா­ரத்­தைக் கையாள்­வ­தற்கு ஐஆர்­ஏ­எஸ் 41 பரி­வர்த்­தனை மாதி­ரி­க­ளைப் பெற்­றுக்­கொண்­டது. ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளுக்கு 'நாகூர் டிரே­டிங்' நிறு­வ­னம் அனுப்­பி­யி­ருந்த கட்­ட­ணச் சீட்­டு­க­ளுக்­கும் இந்த மாதி­ரி­க­ளுக்­கும் தொடர்பு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த மோச­டி­யில் தனக்­குச் சுமார் $36,000 முதல் $72,000 வரை லாபம் கிடைத்­துள்­ள­தாக சுவா தெரி­வித்­தி­ருந்­தார். இருப்­பி­னும், சுவா பணத்­தைத் திருப்­பிக் கொடுக்­க­வில்லை என்று அறி­யப்­படு­கிறது.

எந்­த­வொரு உண்மை வர்த்­த­கச் செயல்­பா­டு­களும் இல்­லாத ஒரு போலி நிறு­வ­னம் இந்த 'நாகூர் டிரே­டிங்' என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!