கனரக வாகனம் சேதம்; ஓட்டுநர் உயிர்தப்பினார்

கனரக வாகனம் சேதம்; ஓட்டுநர் உயிர்தப்பினார்

2 mins read
6d5287d7-43fc-4afa-b030-bd01b61903fb
கொள்கலனை இறக்கிக் கொண்டு இருந்த கனரக வாகனத்தின் ஓட்டுநர் பகுதி விபத்தில் நசுங்கியது. ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். சம்பவம் கடந்த சனிக்கிழமை 15ஏ துவாஸ் சவுத் அவென்யூ 12ல் நிகழ்ந்தது. கொள்கலன்கள் திடீரென சரிந்தது பற்றி விசாரணை நடத்தப்படு வதாக மனிதவள அமைச்சு கூறியது. படம்: சிங்கப்பூர் இன்ஸி டென்ட்ஸ்/ இன்ஸ்டகிராம் -

சரக்­குக் கொள்­க­லன் அடுக்கு திடீ­ரென சரிந்­த­தைத் தொடர்ந்து கன­ரக வாக­னம் ஒன்­றின் ஓட்­டு­நர், தப்­பிக்­கும் முயற்­சி­யில் பக்­கத்து இருக்­கைக்­குத் தாவி­னார். 30களின் வய­து­டைய அந்த இந்­திய நாட்­ட­வர் இந்த விபத்­தில் நினை­வி­ழந்­தார்.

சம்­ப­வம் கடந்த சனிக்­கி­ழமை பிற்­ப­கல் 12.40 மணி­ய­ள­வில் 15ஏ துவாஸ் சவுத் அவென்யூ 12ல் நிகழ்ந்­தது. மற்­றொரு ஓட்­டு­நர் இவரை வெளியே இழுத்­தார்.

லேசான காயங்­க­ளு­டன் இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­

ம­னை­யில் கன­ரக வாகன ஓட்­டு­நர் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சின் பேச்­சா­ளர் நேற்று தெரி­வித்­தார்.

இந்த வேலை­யிட விபத்து தொடர்­பாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் எழுப்­பிய வினாக்­

க­ளுக்­குப் பதி­ல­ளித்த அந்­தப் பேச்­சா­ளர், சம்­ப­வம் குறித்து புலன் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

விபத்­து பற்றிய காணொளி ஒன்று சிங்­கப்­பூர் இன்­ஸி­டென்ட்ஸ் என்­னும் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யா­னது.

பச்­சை­நிற கன­ரக வாக­னத்­தின் ஓட்­டு­நர் பகுதியை சரக்­குக் கொள்­க­லன் அடுக்கு வாக­னம் நசுக்­கு­வ­தை­யும் அதன்­மேல் ஏரா­ள­மான கொள்­க­லன்­கள் விழு­வ­தை­யும் அந்­தக் காணொளி காட்­டி­யது. இரு கொள்­க­லன்­களை சேர்ந்­தாற்­போ­லத் தூக்­கி­ய­போது அடுக்கு வாக­னம் நிலை­கு­லைந்து, அரு­கி­லி­ருந்த கன­ரக வாக­னத்தை நோக்­கித் திரும்­பி­ய­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து கொள்­க­லன்­கள் சரிந்­த­தா­க­வும் பேச்­சா­ளர் தெரி­ வித்­தார்.

வென்டி டிரான்ஸ்­போர்ட் எண்­டர்­பி­ரைஸ் என்­னும் நிறு­வ­னம் அந்த ஓட்­டு­நரை வேலைக்கு அமர்த்தி இருந்­தது. தமது நிறு­

வ­னத்­தின் ஓட்­டு­நர் கொள்­க­லன் ஒன்றை இறக்­கிக்கொண்­டி­ருந்­த­போது சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக அதன் பேச்­சா­ளர் கூறி­னார்.