ஆர்ச்சர்ட் சாலையோர வேடிக்கைக்கு கட்டுப்பாடு

ஆர்ச்சர்ட் சாலையோர வேடிக்கைக்கு கட்டுப்பாடு

1 mins read
28107dc7-ddcc-4820-af5e-dd42f70798ea
-

ஆண்டு இறுதி பண்­டி­கைக் காலத்­தில் பணத்திற்காக சாலையோரத்தில் வேடிக்கை நிகழ்த்தும் (பஸ்கர்ஸ்) நிகழ்ச்­சி­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு விதிக்க அதி­கா­ரி­கள் முடி­வெ­டுத்­துள்­ள­னர். டிசம்­பர் மாதம் வெள்ளி, சனி நாள்­களில் இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை வேடிக்கை காட்­சி­யா­ளர்­கள் சாலை­யே­ரத்­தில் நிகழ்ச்­சி­களை நடத்தக் கூடாது.

அயன் ஆர்ச்­சர்ட், 313@ சோமர்­செட் இடை­யில் எட்டு இடங்­களில் அவர்­க­ளின் நிகழ்ச்­சி­கள் நிறுத்தி வைக்­கப்­படும்.

அயன் ஆர்ச்­சர்ட், விஸ்மா ஏட்­ரியா, நீ ஆன் சிட்டி, தி ஹீரன், 313@சோமர்­செட், நைட்ஸ்­பி­ரிட்ஜ், மாண்­ட­ரின் கேலரி போன்ற இடங்­களில் இந்த நிகழ்ச்­சி­களை நடத்த முடி­யாது.

பாதிக்­கப்­பட்ட எட்டு நாட்­களில் கிறிஸ்­து­ம­சுக்கு முன்­தி­ன­மும் புத்­தாண்­டுக்கு முன்­தி­ன­மும் அடங்­கும்.

ஆனால் கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று காட்­சி­யா­ளர்­கள் நிகழ்ச்­சியை நடத்­த­லாம்.

இந்தக் கட்டுப்பாடு விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யு மாறு வேடிக்கையாளர் சங்கம் தேசிய கலைகள் மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.