சிறு வயதிலிலேயே சிங்கப்பூரில் குடும்பத்துடன் குடியேறிய ஷ்ரிஸ்டிநாத் சர்தார், அவரது குடும்பத்தில் தேசிய சேவை புரியும் முதல் ஆளாகத் திகழ்கிறார்.
தேசிய சேவை புரிய கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு ஷ்ரிஸ்டிநாத் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
நாட்டிற்கு சேவை செய்யும் அரிய வாய்ப்பு தமக்குக் கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ந்ததோடு, தேசிய சேவை புரிவது தன் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது என்று பகிர்ந்துகொண்டார் ஷ்ரிஸ்டிநாத், 19.
தற்காப்பு அமைச்சால் இம்மாதம் 17ஆம் தேதி நடத்தப்பட்ட 'ஸ்பெஷலிஸ்ட் கெடேட்' பட்டமளிப்பு அணிவகுப்பின்போது பட்டம் பெற்ற 795 பேரில் ஷ்ரிஸ்டிநாத்தும் ஒருவர்.
அவருக்கு வெள்ளி விருதும் வழங்கப்பட்டது.
கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த அணிவகுப்பு, சிங்கப்பூர் குடியரசு ஆயுதப் படை, கடற்படை, ஆகாயப் படை மற்றும் மின்னிலக்க நுண்ணறிவுச் சேவைப் பிரிவு ஆகியவற்றின் பட்டதாரிகளுக்கான ஸ்பெஷலிஸ்ட் கேடட் படிப்பு முடித்ததைக் குறிக்கும் நிகழ்வாக அமைந்தது.
அணிவகுப்பில் பட்டதாரிகளிடம் உரையாற்றிய குமாரி கான், சிங்கப்பூரைச் சுற்றி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்
களிலிருந்து நம்மை பாதுகாக்க வலுவான ஆயுதப்படையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பாசிர் லாபா முகாமில் நடந்தேறிய இந்த அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மூத்த அதிகாரிகளுடன் பட்டதாரிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
தமது தேசிய சேவைப் பயணத்தில் அவருடைய பெற்றோரின் ஊக்குவிப்பும் ஆதரவும் முக்கிய பங்காற்றியதாக ஷ்ரிஸ்டிநாத் கூறினார்.
ஆரம்ப காலத்தில் அதிகமான கட்டுப்பாடு, கட்டொழுங்கு போன்ற பண்புகளை கடைப்பிடிப்பது கடினமாக இருந்ததாகவும் தாம் சந்தித்த சவால்கள் மன அழுத்தத்தை கொடுத்தாகவும் கூறிய அவர், இருப்பினும் பெற்றோரின் உற்சாகமூட்டும் ஆலோசனைகள் சவால்களை வெல்ல தனக்குப் பெரிதளவில் உதவியதாகக் குறிப்பிட்டார்.
"ஆறு மாத கால தேசிய சேவைப் பயிற்சிகள் மூலம் பல
தரப்பட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
"எனக்கு வழங்கப்பட வாய்ப்புகள், தலைமைப் பொறுப்புகள் என்னை இன்னும் மேம்படுத்தியுள்ளன.
"அதோடு, சிங்கப்பூர் சூழலில் தேசிய சேவையின் முக்கியத்
துவத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
"வீட்டையும் நாட்டையும் என்னால் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை என்னுள் அதிகரித்துள்ளது," என்று தமது தேசிய சேவை அனுபவம் பற்றி பெருமையுடன் கூறினார் ஷ்ரிஸ்டிநாத்.

