மோசடி: $13.8 மில்லியன் இழந்த அமெரிக்க முதலீட்டாளர்கள்

சைமெக்ஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் அனைத்­து­லக பணப் பரிவர்த் தனை சந்­தை­யைச் சேர்ந்த இணைய முக­வரி என்று காட்டி போலி­யான முக­வ­ரி­க­ளைப் பயன்­ப­டுத்தி மோசடி அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.

அந்த இணைய நாணய மோசடி­யில் சிக்கி ஐந்து அமெரிக்க முத­லீட்­டா­ளர்­கள் US$10 மில்­லி­ய­னுக்கும் (S$13.8மில்­லி­யன்) அதிக தொகையைப் பறி கொடுத்து உள்­ள­னர்.

மோச­டிக்­காரர்­கள் கடந்த மே மாதத்­திற்­கும் ஆகஸ்ட் மாதத்­திற்கும் இடை­யில் கைவ­ரி­சை காட்டி இருக்­கி­றார்­கள்.

அந்­தச் சட்டவிரோத பேர்­வழி­கள், இணைய நாணய மோசடியில் அப்­பா­வி­களைச் சிக்க வைத்து போலி­யான இணை­யத்­தளங்­களில் முத­லீடு செய்­யும்­படி அவர்களை ஏமாற்றி இருக்­கி­றார்­கள்.

நம்பி முத­லீடு செய்­த­வர்­க­ளின் பணம் தனி­யார் பைக­ளுக்­குப் போய்­விட்­டது என்று அமெ­ரிக்­கா­வின் சட்ட அமைச்சு திங்­கள்­கி­ழமை தெரி­வித்­தது.

முத­லீட்­டா­ளர்­க­ளுக்­குச் சந்­தேகம் வரா­மல் அவர்­களை நம்­ப­வைக்­க­ வேண்­டும் என்­ப­தற்­காக மோச­டிப் பேர்­வ­ழி­கள், சைமெக்ஸ் சந்தை இணை­யத்­த­ளங்­க­ளைப் போன்ற போலியான ஏழு இணை­யத்­த­ளங்­களை உரு­வாக்­கி­னர்.

அந்த முக­வ­ரி­க­ளின் வழி­யாக முத­லீட்­டா­ளர்­கள் வரு­நிலை வர்த்­த­கம் என்ற பெய­ரில் நிதி உடன்­பா­டு­களை உள்­ள­டக்­கிய வர்த்­த­கத்­தில் ஈடு­ப­ட­லாம்.

அந்த இணை­யத்­த­ளங்­களை முடக்­கும்­படி அமெ­ரிக்காவின் வெர்­ஜி­னியா மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

தில்­லு­முல்லுப் பேர்­வ­ழி­கள் இணை­யத்­த­ளங்­க­ளைப் பயன்­படுத்தி இணைய முக­வ­ரி­களை உரு­வாக்­கு­வார்­கள். அந்த முகவரி­ கள் நம்­பத்­த­குந்த நிறு­வ­னங்களின் முக­வ­ரி­கள் போல இருக்கும்.

ஆனால், அந்த முக­வ­ரி­க­ளைப் பயன்­ப­டுத்தி செயல்­ப­டும்­போது அப்­பா­வி­கள் இணைய மோச­டிப் பேர்­வ­ழி­க­ளின் போலித் தளங்­களில் பணத்தை இழந்து­வி­டு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!