ஆசியான் தற்காப்புக் கூட்டங்களில் பலதரப்பு ஒத்துழைப்புக்கு சிங்கப்பூர் மறுஉறுதி

ஆசியான் தற்காப்புக் கூட்டங்களில் பலதரப்பு ஒத்துழைப்புக்கு சிங்கப்பூர் மறுஉறுதி

2 mins read
f77f03cb-6dee-4d3c-ac6f-45ea36952faf
கம்போடியாவில் ஆசியான்-இந்தியா தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (இடது), இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். படம்: இங் எங் ஹென்/ஃபேஸ்புக் -

ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் ஓய்­விட சந்­திப்­பி­லும் சாதா­ரண நிலை சந்­திப்­பி­லும் பல­த­ரப்பு ஒத்­து­ழைப்பை சிங்­கப்­பூர் மறு­உ­று­திப்­படுத்­தி­யது.

கம்­போ­டி­யா­வின் சியாம் ரீப் நகரில் அமெ­ரிக்கா, இந்­தி­யா­வு­டன் கூடிய அந்­தக் கூட்­டங்­களில் தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென் கலந்­து­கொண்­டார்.

ஓய்­விட சந்­திப்­பில் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்ட ஏற்­பாட்­டின் (ஏடி­எம்­எம்) முன்­னேற்­றம் பற்றி அமைச்­சர்கள் விவா­தித்­த­னர்.

வட்­டார, உலக, பாது­காப்­புச் சூழல் பற்­றி­யும் ஏடி­எம்­எம் ஏற்­பாடு, ஏடி­எம்­எம்- இதர நாடு­கள் (ஏடி­எம்­எம்-பிளஸ்) ஏற்­பாடு ஆகி­ய­வற்­றுக்­கான எதிர்­கால ஒத்­து­ழைப்புத் துறை­கள் பற்­றி­யும் அவர்­கள் கருத்­து­களைப் பகிர்ந்­து­கொண்­ட­தாக தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

ஏடி­எம்­எம்-பிளஸ் கண்­கா­ணிப்பு செயல்­திட்ட வல்­லு­நர்­கள் பணிக்­கு­ழு­வில் கனடா, பிரான்ஸ், பிரிட்­டன் ஆகி­ய­வற்­றின் ஈடு­பாட்டை ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் அங்­கீ­க­ரித்­த­னர்.

இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­மைத்­து­வத்­தின் கீழ் அடுத்த ஆண்டு அந்­தச் செய்­ல­திட்­டம் தொடங்­கு­வதை­யும் அவர்­கள் வர­வேற்­ற­னர்.

அமை­தி­யை­யும் நிலைப்­பாட்­டை­யும் கட்­டிக்­காக்­கக்­கூ­டிய, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கிய, திறந்த வட்­டா­ரப் பாது­காப்பு ஏற்­பாட்­டின் முக்­கி­யத்­து­வத்தை டாக்­டர் இங் வலி­யு­றுத்­தி­னார்.

ஆசி­யான்-அமெ­ரிக்கா தற்­காப்பு அமைச்­சர்­க­ளின் சாதா­ரண நிலை கூட்­டத்­தில் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­களும் அமெ­ரிக்­கா­வின் தற்­காப்பு அமைச்­ச­ரும் ஒத்­துழைப்பைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­கள் பற்றி விவா­தித்­த­னர்.

ஆசி­யான்-இந்­தியா தற்­காப்பு அமைச்­சர்­கள் சாதா­ர­ண­நிலை சந்­திப்­பில் ஆசி­யான் அமைச்­சர்­களும் இந்­தி­யத் தற்­காப்பு அமைச்­ச­ரும் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ள ஆசி­யான்-இந்­தியா கடல்­துறை பயிற்­சியை வர­வேற்­ற­னர்.

இது, ஆசி­யான்-இந்­தியா தற்­காப்பு அமைச்­சர்­க­ளின் முத­லா­வது சதா­ர­ண­நிலை கூட்­ட­மா­கும்.

இப்­போ­தைய ஒத்­து­ழைப்­பைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான கருத்­து­களைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். ஒத்­து­ழைப்­புக்­கான புதிய துறை­களை அடை­யா­ளம் காண்பது பற்றியும் அவர்­கள் விவாதித்தனர்.

டாக்­டர் இங் கம்­போ­டிய துணைப் பிர­த­ம­ரும் தேசிய தற்­காப்பு அமைச்­ச­ரு­மான டீ பானை சந்­தித்­தார். அந்­தச் சந்­திப்­பின்­போது இரு­த­ரப்பு தோழமை தற்­காப்பு உறவை இரு­வ­ரும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர். ஆசி­யா­னின் ஐக்­கி­யம், நடு­நிலை ஆகி­ய­வற்­றின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

டாக்­டர் இங் இன்று ஒன்­ப­தா­வது ஏடி­எம்­எம்-பிளஸ் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வார்.

இந்­தக் கூட்­டத்­தில் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­களும் ஆஸ்­தி­ரே­லியா, சீனா, இந்­தியா, ஜப்­பான், நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா, ரஷ்ய சம்­மே­ள­னம், அமெ­ரிக்கா ஆகிய எட்டு பிளஸ் நாடு­க­ளின் தற்­காப்பு அமைச்­சர்­களும் பிர­மு­கர்­களும் கலந்­து­கொள்­வர்.