சுற்றுச்சூழலுக்கு உதவுவோரை சிறப்பிக்க புது விருது அறிமுகம்

சுற்றுச்சூழலுக்கு உதவுவோரை சிறப்பிக்க புது விருது அறிமுகம்

1 mins read
e522a589-f15c-4ce2-b079-c722f8d94119
-

யுஓபி வங்­கி­யும் பிசி­னஸ் டைம்ஸ் (பிடி) செய்­தித்­தா­ளும் சேர்ந்து விருது ஒன்றைத் தொடங்­கு­கின்­றன.

அந்த விருது, சிங்­கப்­பூ­ரில் சுற்றுச்­சூ­ழ­லைக் காப்­ப­தில் தலை­மைத்­துவப் பங்­காற்­று­கின்ற தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் அங்­கீ­க­ரித்­துப் பாராட்­டும்.

'சுற்­றுச்­சூ­ழல் நற்­ப­லன் விருது' என்று அந்­தப் புதிய விருது குறிப்­பி­டப்­படும்.

புதிய விருது, சுற்­றுச்­சூ­ழ­லிலும் சமூ­கத்­தி­லும் கணி­ச­மான அளவுக்கு ஆக்­க­க­ர­மான விளைவு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்ற மக்­க­ளை­யும் நிறு­வனங்­க­ளை­யும் அடை­யா­ளம் கண்டு அவர்­களைக் கொண்­டாடி மகி­ழும்.

தனிப்­பட்­ட­வர்­கள், நிறு­வ­னங்­கள் என்று இரண்டு வகை விருது­கள் இருக்­கும்.

நிறு­வ­னங்­கள் பிரி­வில் ஒன்று சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உரி­ய­தா­கும். மற்­றொன்று பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு உரி­ய­தா­கும்.

ஒவ்­வொரு பிரி­வும் முதன்­மை­யான ஒரு­வ­ரை­யும் ஐந்து பேர் வரைப்­பட்ட உன்­னத விரு­தா­ளர்­களை­யும் அடை­யா­ளம் காணும்.

விருது பற்­றிய விவ­ரங்­கள் அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் வெளி­யி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

புதிய விருது பற்றி கருத்து தெரி­வித்த பிடி ஆசி­ரியர் சென் ஹுய்­ஃபென், தனிப்­பட்­ட­வர்­கள் நிறு­வ­னங்­களில் சுற்­றுச்சூ­ழ­லுக்­குத் தொண்­டாற்­றும் உண்­மை­யான சாத­னை­யா­ளர்­களைச் சிறப்­பிப்­பது நோக்­கம் என்­றார்.

இந்த விருது மேலும் பல­ரும் சுற்றுச் சூழலுக்குத் தொண்டாற்ற ஊக்­க­மூட்­டும் என்று யுஓபி தலைமை அதி­காரி எரிக் லிம் கூறி­னார்.