தைவானியத் தந்தையும் மகளும் அமெரிக்கா அனுப்பப்படுவர்

தைவானியத் தந்தையும் மகளும் அமெரிக்கா அனுப்பப்படுவர்

2 mins read
bca1fd5d-0cfe-48cf-9d0a-da22334ea873
-

தைவா­னைச் சேர்ந்த தந்­தை­யும் மகளும் 20 ஆண்டு கால­மாக அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கா­மல் இருந்து வந்­த­னர். அவர்­கள் சிங்­கப்­பூ­ரில் காணப்­பட்­ட­னர். பிறகு கைது செய்­யப்­பட்­ட­னர்.

வோனி சென், 57, என்ற மாதும் அவ­ரு­டைய தந்­தை­யான ரிச்­சர்ட் சென், 87, என்­ப­வ­ரும் போலி­யான ரசீ­து­க­ளைப் பயன்­ப­டுத்தி கடன் கொடுக்­கும் நிறு­வ­னம் ஒன்­றி­டம் இருந்து US$5 மில்­லி­யன் (S$6.9 மில்­லி­யன்) கடன் பெற்­ற­னர்.

அதை­ய­டுத்து அந்த இரு­வ­ரும் தில்­லு­முல்லு தொடர்­பில் 2001ஆம் ஆண்டு குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

ரிச்­சர்ட் சென் முதல்­வ­ராக இருந்தார்.

அவ­ரு­டைய புதல்வி பிளாஸ்­டிக் பைகளை உரு­வாக்கி விற்­கும் 'கோல்­டன் பசு­பிக் மெனு­ஃபி­ராய்ச்­ச­ரிங் கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வ­னத்­தின் தலைவி­யாக இருந்­தார்.

அந்த நிறு­வ­னத்­துக்­குப் பணப் பிரச்­சினை ஏற்­பட்­டது. அத­னை­அடுத்து அந்த இரு­வ­ரும் தில்­லு­முல்லு காரி­யங்­களில் இறங்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இரு­வ­ரும் 2001 அக்­டோ­ப­ரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­னர். 2002 மே மாதம் தண்­டனை விதிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாக அவர்­கள் தவ­றி­விட்­ட­னர். அத­னை­ய­டுத்து இரு­வரை­யும் கைது செய்ய ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, கலி­ஃபோர்­னி­யாவைச் சேர்ந்த அமெ­ரிக்க சட்­டத் துறை அலு­வ­ல­கம் இந்த ஆண்டு நவம்­பர் 18ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் அவர்கள் இருவரும் இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­களுக்கு சிங்­கப்­பூர் அதி­கா­ரி­கள் தக­வல் தெரி­வித்­த­னர்.

அமெ­ரிக்கா பிறப்­பித்து இருந்த தற்­கா­லிக கைது உத்­த­ர­வின் பேரில் அவர்கள் இரு­வ­ரும் கைது செய்யப்­பட்­ட­னர்.

தங்­களை அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்ப அவர்கள் இணங்கி இருப்­ப­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

அதற்குப் பிறகு, இரு­வ­ரை­யும் அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்ப சிங்­கப்­பூர் சட்ட அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­த­தா­க­வும் அந்த அறிக்கை தெரி­வித்­தது.

அந்த உத்­த­ர­வின்­படி நவம்­பர் 17ஆம் தேதி வோனி சென் அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பப்­பட்­டார்.

அடுத்த நாளன்று அமெ­ரிக்க நீதி­மன்­றம் ஒன்­றில் அவர் முன்­னி­லை­யா­னார்.

ரிச்­சர்ட் சென் அமெ­ரிக்­கா­வுக்­குத் திருப்பி அனுப்­பப்­பட காத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்க சட்­டத்­துறை அலு­வ­ல­கம் தெரி­வித்து உள்­ளது.