பஹாமாவைத் தளமாகக்கொண்டு செயல்பட்டு வந்த FTX.com என்ற மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனைத் தளம் இப்போது செயல்படவில்லை. அது பண நெருக்கடி காரணமாக நொடித்துப்போகும் அளவுக்குப் போய்விட்டது. அந்தத் தளத்தின் மிக முக்கிய போட்டியாளராக 'பினான்ஸ்' என்ற தளம் செயல்பட்டு வந்தது.
ஆனால் இது 2021 டிசம்பரில் மூடப்பட்டுவிட்டது.
இதைப் பயன்படுத்தி வந்தவர்கள் FTX.com பக்கம் சாய்ந்த னர். FTX.com தளம் வழி புழங்கியோரில் 5% சிங்கப்பூர் முதலீட்டாளர்கள். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரைபயனீட்டாளர்களின் மாதாந்திர எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தளத்தைப் பயன்படுத்திய வர்களில் இரண்டாவது ஆகப் பெரிய குழுவினர் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள்தான்.
ஒவ்வொரு மாதமும் இந்தத் தளம் வழி சராசரியாக 241,675 சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது 'காய்ன்ஜெக்கோ' என்ற மின்னிலக்க நாணயத் தகவல் தொகுப்பு நிறுவனம் கூறியது.
இதில் 6.1% அளவுடன் தென்கொரியாதான் முதல் இடத்தில் இருக்கிறது.
தென்கொரியாவில் இருந்து மாதாமாதம் சராசரியாக 297,229 பேர் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 4.6% இணையப் புழக்கத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜப்பானின் மாத சராசரி எண்ணிக்கை 223,513 ஆக இருந்தது.

