வேலை நியமன முகவை முன்னாள் இயக்குநருக்கு அபராதம்

வேலை நியமன முகவை முன்னாள் இயக்குநருக்கு அபராதம்

1 mins read
f6c307c5-eb61-4a98-886f-b6aab46f9873
இங் யோங் ஷெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை நிய­மன, மாண­வர் சேர்ப்பு முகவை ஒன்­றில் இயக்­கு­ராக வேலை பார்த்த ஒரு­வர், வாடிக்­கை­யா­ளர் கொடுத்த $4,400 பணத்­தைப் பையில் போட்­டுக்­கொண்­டார்.

இங் யோங் ஷெங், 37, என்ற அந்த இயக்­கு­ந­ருக்கு, நம்­பிக்கை மோசடி செய்­த­தற்­காக நேற்று $6,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

தில்­லு­முல்லு குற்­றச்­சாட்டு கவனத்­தில் எடுத்­துக்கொள்­ளப்­பட்டு அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

'எம்­பெ­யர் குளோ­பல் ரெக்­ரூட்­மெண்ட்' என்ற நிறு­வ­னத்­தில் இங் வேலை பார்த்து வந்­தார். மலே­சி­யா­வைச் சேர்ந்த 28 வயது மாது ஒரு­வர் சிங்கப்பூரில் வேலை பார்க்க அனு­மதி பெறு­வ­தற்­காக 2017ல் அந்த நிறு­வ­னத்தை அணு­கி­னார். அவ­ருக்கு அனு­மதி கிடைத்­தது.

அந்த மாதி­டம் இருந்து 2017 மே மாதத்­திற்­கும் ஆகஸ்ட் மாதத்­திற்­கும் இடை­யில் நான்கு தவணை­யாக மொத்­தம் $4,400 தொகையை இங் பெற்­றுக்­கொண்­டார்.

அதை அவர் தவ­றா­கப் பயன்­படுத்­தி­ய­தாக விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

தவற்றை மூடி மறைப்பதற்காக அவர் அந்த மாதுக்குப் போலி­யான ரசீ­து­க­ளை­யும் மின்­னஞ்­ச­லை­யும் அனுப்­பி­னார். இங் 2018 ஜூலை­யில் அந்த நிறு­வ­னத்­தில் இருந்து வில­கி­விட்­டார். அதில் தான் வைத்­தி­ருந்த பங்­கு­களை விற்­று­விட்­டார்.

2018 ஆகஸ்ட்­டில் நடந்த கணக்­குத் தணிக்­கை­யின்­போது இங்­கின் குற்­றங்­கள் அம்­ப­ல­மா­யின.