2023ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும்

2023ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும்

1 mins read
e90bccdb-e3a2-4f42-a98d-24b147cb35d9
சிங்கப்பூர் பொருளியல் 2023ல் 0.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையலாம் என்று வர்த்தக தொழில் அமைச்சு கூறியுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டு மெதுவடைய உள்ளது.

சிங்கப்பூர் பொருளியல் 2023ல் 0.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையலாம் என்று வர்த்தக தொழில் அமைச்சு கூறியுள்ளது.

அடுத்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி பற்றி அமைச்சு முதன்முறையாக முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது.

உலகளாவியத் தேவை குறைவதால் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் துறைகள் மெதுவடையும் என்று அமைச்சு தெரிவித்தது.

இந்த ஆண்டுக்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னுரைப்பையும் அமைச்சு திருத்தியது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ 3.5 விழுக்காடு உயரும் என்றது அமைச்சு.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை உயரும் என்று அது முன்னுரைத்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்