எட்டு மாதங்களில் முதன்முறையாக சரிந்த பணவீக்கம்

எட்டு மாதங்களில் முதன்முறையாக சரிந்த பணவீக்கம்

1 mins read
f77095d8-5e47-4c0d-8e81-b79c8a4bc046
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூலாதார பணவீக்கம் பிப்ரவரி மாதத்திலிருந்து முதல் முறையாக சரிந்துள்ளது.

இது பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு, சரிய தொடங்கியிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்று பொருளியலாளர்கள் தெரிவித்தனர்.

மின்சாரம், எரிவாயு, சில்லறை விற்பனை, பொருள் சேவை விலைகளில் சிறுசிறு உயர்வுக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் பணவீக்கம் குறைந்துள்ளது.

தனியார் போக்குவரத்து, தங்குமிடம் தவிர்த்த மூலாதார பணவீக்கம், சிங்கப்பூர் இல்லங்களின் செலவுகளை மிகத் துல்லியமாகக் காட்டும். ஆண்டு அடிப்படையில் அது 5.1% குறைந்துள்ளது.

மேலும் இது செப்டம்பர் மாத விகிதமான 5.3%விட குறைவு, ஆகஸ்ட் மாத விகிதத்துடன் ஒத்திருக்கிறது.

அக்டோபர் மாத வாடிக்கையாளர் விலை குறியீடு அல்லது ஒட்டுமொத்த பணவீக்கம் 6.7% ஆனது.

இது தனியார் போக்குவரத்து பணவீக்கம் சரிவு காரணமாக நிகழ்ந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

இந்த விகிதம் செப்டம்பர் மாத விகிதமான 7.5%விட குறைவு.