ஹவ்காங் வீட்டில் தீ; இருவர் மருத்துவமனையில்

ஹவ்காங் வீட்டில் தீ; இருவர் மருத்துவமனையில்

1 mins read
00f7810b-614b-4ba5-b254-51e8bddd1e25
-

ஹங்­காங்­கில் உள்ள ஒரு அடுக்கு­ வீட்­டில் நேற்று பிற்­ப­கல் தீப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து இரு­வர் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

20 பேர் அவர்­க­ளின் இருப்­

பி­டங்­களில் இருந்து அகற்­றப்­பட்­ட­னர். தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் ஒன்­றுக்கு மின்­னேற்­றி­ய­போது தீப்­பற்­றி­ய­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

புளோக் 699 ஹவ்­காங் ஸ்தி­ரீட் 52ன் ஐந்­தா­வது தளத்­தில் உள்ள வீட்­டில் தீப்­பி­டித்­த­தாக தங்­க­ளுக்­குப் பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

படை­யி­னர் சென்­ற­போது அந்த வீட்­டில் புகை மண்­டி­யி­ருந்­தது. இருப்­பி­னும் அவர்­கள் போராடி தீயை கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர்.

வீட்­டின் சமை­ய­ல­றை­யில் இருந்து மீட்­கப்­பட்ட இரு­வர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­கும் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­கும் தனித்­த­னி­யா­கக் சொண்டு செல்­லப்­பட்­ட­னர். அந்த புளோக்­கில் இருந்து 20 குடி­

யி­ருப்­பா­ளர்­கள் பாது­காப்­புக்­காக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.