வர்த்தக வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணங்கள் (சிஓஇ) நேற்றைய ஏல முடிவில் வரலாறு காணா உச்சத்தைத் தொட்டன.
அதேநேரம் சிறிய கார்களுக்கான சிஓஇ புதிய உச்சத்தை நெருங்கியது.
அந்த வகையில், 1,600சிசி வரையிலான கார்கள் மற்றும் 147பிஎச்பி வரையிலான மின்சார கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணம் 3.8 விழுக்காடு கூடி $90,589 என முடிவடைந்தது.
இது 2013 ஜனவரியில் பதிவான ஆக உச்சக் கட்டணமான $92,100ஐ நெருங்கி உள்ளது.
வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ 7.2 விழுக்காடு அதிகரித்து $81,802 என்னும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இவ்விரண்டு பிரிவுகளிலும் உயர்வு காணப்பட்டபோதிலும் மற்ற பிரிவுகளில் இறக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக, 1,600சிசிக்கு மேற் பட்ட பெரிய கார்கள் அல்லது 147பிஎச்பிக்கு மேல் உள்ள மின்சார கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் 1.3 விழுக்காடு சரிந்து $113,881 ஆனது.
பெரும்பாலும் பெரிய வாகனங் களையும் அதிக ஆற்றல் கொண்ட கார்களையும் உள்ளடக்கிய பொதுப் பிரிவில் 2.2. விழுக்காடு குறைவாக சிஓஇ பதிவானது. அதன் முடிவு கட்டணம் $114,009.
மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணத்திலும் சரிவு பதிவானது. அது 4.5 விழுக்காடு குறைந்து $12,589 ஆனது.

